Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழ் மாணவர்களைப் புறக்கணிக்கும் சென்னைப் பல்கலை?!- ஆர்.டி.ஐ-யில் வெளியான அதிர்ச்சி தகவல்

சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை குறைவதாகக் குற்றம் சாட்டுகின்றனர் தமிழ் ஆர்வலர்கள். 'வடமாநில மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. திட்டமிட்டே நமது மாணவர்களுக்கான வாய்ப்பைக் குறைக்கின்றனர்' என்கின்றனர் பல்கலைக்கழக பேராசிரியர்கள். 

சென்னைப் பல்கலைக்கழகம்

தமிழக பல்கலைக்கழகங்களில் 100 ஆண்டுகளைக் கடந்தும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பெருமை குறையவில்லை. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர் சேர்க்கையில் நிர்வாகம் காட்டி வரும் குளறுபடியால் தமிழ் மாணவர்கள் பாதிக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளின் உண்மை நிலையை அறிய, மாணவர் சிவச்சந்திரன் என்பவர் ஆர்.டி.ஐ மூலம் சில கேள்விகளைக் கேட்டிருந்தார். 2014-15, 2015-16 மற்றும் 2016-17 ஆகிய கல்வியாண்டுகளில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை விவரங்களைக் கேள்விகளாகக் கேட்டிருந்தார். இதற்கு பதில் கொடுத்த பல்கலைக்கழக நிர்வாகம், '2014-15 கல்வியாண்டில் வெளிமாநில மாணவர்களின் எண்ணிக்கை 10 சதவிகிதமாக இருந்தது. அதுவே, 2015-16 கல்வியாண்டில் 12 சதவிகிதமாகவும் 2016-17 கல்வியாண்டில், இந்த எண்ணிக்கை 14 சதவிகிதமாக கூடியுள்ளது' எனக் குறிப்பிட்டுள்ளது. அதேபோல், 'தமிழ் மாணவர்களுக்கு இருக்கும் 85 சதவிகித ஒதுக்கீட்டையும் மறுக்கும் சூழல் உருவாகி வருகிறது. இந்த கல்வியாண்டிலேயே கிட்டத்தட்ட 15 சதவிகித இடங்கள், வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. தவிர, எஸ்.டி, எஸ்.டி மாணவர்களுக்கான இடங்களிலும் வேறு மாநிலத்தவர்களே அதிகம் பயனடைகின்றனர்' என்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள். 

இதுகுறித்துப் பேசிய பல்கலைக்கழக ஊழியர் ஒருவர், " இவர்கள் கொடுக்கும் கணக்குகள் அனைத்தும் பொதுப்பிரிவில் சேர்க்கப்படும் மாணவர்களைப் பற்றியது. உண்மையில் அனைத்து இடங்களிலும் வேறு மாநிலத்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது" என ஆதங்கப்பட்டவர், " சென்னைப் பல்கலைக்கழகத்திலேயே கிராமப்புற மற்றும் ஒரு பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு துரோகம் இழைக்கப்படுவது கொடுமையானது. வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் முன்னுரிமை என்றால், இது யாருக்கான பல்கலைக்கழகமாக இருக்கிறது. இதைப் பற்றி பேராசிரியர்களும் கவலைப்படவில்லை" என்றார்.

சென்னைப் பல்கலைக்கழகம்

இந்த விவகாரம் குறித்து பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை பிரிவின் அலுவலரிடம் விளக்கம் கேட்டோம். ''கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ் மாணவர்கள் சேர்க்கை விகிதம் கலை பாடப்பிரிவுகளில்தான் குறைந்துள்ளன. ஆனால், அறிவியல் துறைகளில் தமிழ் மாணவர்கள் சேர்க்கை உயர்ந்துள்ளன. தவிர, பிற மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் அனைவருமே பொதுப்பிரிவின்கீழ் மட்டும்தான் சேர்க்கப்படுகிறார்கள். தமிழ் மாணவர்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டில் வேறு மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் சேர்க்கப்பட்டால் புகார் கூறலாம். அதேபோல், கலைப் பிரிவுகளில் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் விண்ணப்பிக்கின்றனர். அறிவியல் துறைகளில் தமிழ் மாணவர்கள் அதிகளவில் விண்ணப்பிக்கின்றனர். உண்மையில் இணையவழி மூலம் மட்டும் விண்ணப்பம் பெறும் முறை இருந்தாலும், விண்ணப்பிக்கும் தேதி முடிந்த பின்னரும் கிராமப்புறங்களில் இருந்து வரும் மாணவர்களுக்காக நேரடி விண்ணப்பம் கொடுக்கும் முறையையும் சில துறைகளில் பின்பற்றுகிறோம்" என்றார் இயல்பாக.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close