Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பத்துத்தூண்களை மீட்ட மதுரை மாநகராட்சி  கமிஷனர்!

மதுரையை  நாயக்க மன்னர்கள் ஆண்டதின் அடையாளமாக பல நினைவுச் சின்னங்கள் அரண்மனையாக, கோயில்களாக, ஏரி குளங்களாக இன்றும் காட்சி தந்துகொண்டிருக்கிறது. அதில் ஒன்றுதான் பத்து தூண்கள். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கும், திருமலை நாயக்கர் அரண்மனைக்கும் இடைப்பட்ட பகுதியில் விளக்குத்தூண் அருகில் வரிசையாக அமைந்துள்ளது இந்த பத்து தூண்கள்.  மூன்று பேர் சேர்ந்து கட்டிப்பிடிக்கும் அகலத்தில் அமைந்துள்ள இந்தத் தூண்களில்தான் அரண்மனை யானைகளை அக்காலத்தில்  கட்டி வைத்திருப்பார்களாம். வேறு எங்கும் இதுபோன்ற அமைப்பு இல்லை. மக்கள் பார்த்துச் சென்ற இத்தூண்கள், கால மாற்றத்தில் கடைகள், கட்டடங்கள் என ஆக்கிரமிப்புக்கு நடுவில் மாட்டிக்கொண்டு மறைந்துள்ளது. சுற்றுலாப்பயணிகள் இதைப்பற்றி அறிந்திருந்தாலும் நேரில் காண முடியாத நிலை.

madurai corporation commissioner

இந்த நிலையில்தான், மதுரை மாநகராட்சியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள கமிஷனர் அனீஷ்சேகர், பத்து தூணின் வரலாறு தெரிந்து அதை மீட்கும் வகையில் அருகிலுள்ள கடைகளை  காலி செய்ய உத்தரவிட்டுள்ளார். அவர்களுக்கு மாற்று இடமும் ஒதுக்க உத்தரவிட்டுள்ளார். இதனால் மதுரை மக்களும் சுற்றுலாப்பயணிகளும் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close