Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கிய அணு உலை நிர்வாகம்!

கூடங்குளம் அணு உலை நிர்வாகத்தின் சார்பாக அரசுப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற சுற்றுப்புறக் கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. 

நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் இரு அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும், இரு உலைகளுக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கி உள்ளன. அத்துடன், 5-வது மற்றும் 6-வது அணு உலைகளை அமைப்பது தொடர்பாக அமெரிக்காவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஆனால், கூடங்குளத்தில் அணு உலைகள் செயல்படுவதற்கு சுற்றுப்புறக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். கதிர்வீச்சு தொடர்பாக மக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தையும் எதிர்ப்பையும் மீறி  உலைகளை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அணு உலை நிர்வாகம்

மக்களிடம் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் சுற்றுப்புறக் கிராமங்களுக்கு பல்வேறு உதவிகளை கூடங்குளம் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். குறிப்பாக, பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர்கள் வழங்குவது. விளையாட்டு உபகரணங்கள் கொடுப்பது, தண்ணீர்த் தொட்டி அமைத்துக் கொடுப்பது போன்ற உதவிகளைச் செய்து வருகின்றனர். பள்ளிகளுக்கு மட்டும் அல்லாமல் கிராம மக்கள் பயனடையும் வகையிலான திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சுற்றுப்புறக் கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வித் திறமையைப் பாராட்டி கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 2016-2017-ம் கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பாராட்டப்பட்டனர். கூடங்குளம் மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 19 பள்ளிகளில் படிக்கும் 95 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டது.

வளாக இயக்குநர் ஜின்னா

எஸ்.எஸ்.எஸ்.சி தேர்வில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த 61 மாணவர்களும், பிளஸ் 2 தேர்வில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த 34 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். கூடங்குளம், அணு விஜய் நகரில் உள்ள சாரக் ஸ்வரம் ஹாலில் நடைபெற்ற விழாவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப் பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டது.

மாணவர்களுக்கு பரிசு

இதற்கான விழாவுக்கு கூடங்குளம் வளாக இயக்குநர் எஸ்.வி.ஜின்னா தலைமை வகித்தார். சேரன்மகாதேவி கல்வி மாவட்ட அதிகாரி ஜெயராஜ், அணுசக்தி பள்ளியின் முதல்வர் ஸ்ரீனிவாசராவ், செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சாந்தினி குமாரி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close