Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'விரைவில் அணிகள் இணைப்பு..!'- பொள்ளாச்சி ஜெயராமன் தகவல்

அணிகள் இணைப்பு விரைவில் நடைபெறும் என்று தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். 

பொள்ளாச்சி ஜெயராமன்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்குப் பின்னர், அ.தி.மு.க பல்வேறு அணிகளாகப் பிரிந்து செயல்பட்டுக்கொண்டு வருகிறது. சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த டி.டி.வி தினகரன், "இன்னும் 60 நாள்கள் பொறுமையாக இருப்பேன். அதுவரை அணிகள் இணையவில்லை என்றால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பேன்" என்றார். 

இந்நிலையில் தினகரன் அளித்த 60 நாள் கெடு வரும் 4-ம் தேதியுடன் முடிகிறது. இதைத் தொடர்ந்து இரு அணிகளும் இணைவது குறித்து அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது அணியினருடன் ராயப்பேட்டையில் இருக்கும் கட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்தக் கூட்டதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்தக் கூட்டத்தில், அணிகள் இணைப்பு குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கும் எனத் தெரிகிறது. இதே நேரத்தில், பன்னீர்செல்வம் தன் ஆதரவாளர்களுடன் தனது வீட்டில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். பொன்னையன், மதுசூதனன், மனோஜ் பாண்டியன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

தினகரன் வரும் 5-ம் தேதி மாவட்டச் செயலாளர்களின் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். அதற்கு முன்னதாக இரு அணிகளும் இணைப்பு குறித்து முக்கிய ஆலோசனையில் இன்று ஈடுபட்டுள்ளதால், இணைப்பு குறித்து முக்கிய முடிவுகள் எட்டப்படலாம் எனத் தெரிகிறது. மேலும் தினகரன், நாளை பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவை நேரில் சென்று சந்திக்க உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. 

இப்படி பரபரப்பாக அ.தி.மு.க-வின் அரசியல் நிலவரம் இருக்கும் நிலையில்தான் பொள்ளாச்சி ஜெயராமன், 'அணிகள் இணைப்பு எப்போது நடக்கும் என்று காலவரையறையைக் கூற முடியாது. ஆனால், விரைவில் அணிகள் இணைப்பு நடக்கும்' என்று கூறியுள்ளார்.  


 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close