Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அண்ணா பல்கலையில் இடம் பிடித்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு

அரசுப் பள்ளிகளில் பயின்று அண்ணா பல்கலைக் கழக பொறியியல் கல்லூரிகளில் இடம்பிடித்த மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு தெரிவித்தார்.


ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயின்று அதிக மதிபெண்கள் பெற்று சிறப்பாக செயல்படும் மாணவர்களை மெருகேற்றும் வகையில், தகுதித் தேர்வு நடத்தப்பட்டு அதன்மூலம் தேர்வு செய்யப்படும் மாணவ மாணவியர்களுக்கு மீள்திறன் பயிற்சி வகுப்புகள்  (ELITE Class) மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்பட்டு வருகின்றன. 2016-17-ம் கல்வியாண்டில் 68 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு பயிற்சிகள் மற்றும் தேர்வுகள் நடத்தப்பட்டன.

அண்ணா பல்கலையில் இடம் பிடித்த அரசு பள்ளி மாணவர்கள்

கடந்த மார்ச் மாதம் நடந்த அரசுப் பொதுத் தேர்வு எழுதிய இவர்களில் 18 பேர் 1100-க்கும் மேற்பட்ட  மதிபெண்களும், 8 பேர் 1050-க்கும் மேற்பட்ட மதிப்பெண்களும், ஒட்டு மொத்தமாக 68 மாணவர்களில் 63 பேர் 1000-க்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இந்நிலையில் தற்போது நடந்து வரும் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வில் எலைட் வகுப்பில் பயின்ற 19 மாணவர்கள் அண்ணா பல்கலைக் கழகம் (கிண்டி) மற்றும் அண்ணா பல்கலைக் கழகம் (எம்.ஐ.டி வளாகம்) உள்ளிட்ட தமிழகத்தின் தலைசிறந்த கல்லூரிகளில் பயில்வதற்கு  தேர்வாகியுள்ளனர்.


இதன்மூலம் மாவட்டத்துக்குப் பெருமை சேர்த்துள்ள இந்த மாணவர்களை, இன்று சந்தித்த மாவட்ட ஆட்சியர் நடராஜன் அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி வாழ்த்துகள் தெரிவித்தார்.  மேலும், இந்தக் கல்வி ஆண்டில் எலைட் வகுப்பில் பயின்றுவரும் மாணவர்கள்  தங்களின் முன்னோடியாக திகழும் மாணவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு நல்ல மதிப்பெண்கள் பெற கடுமையாக உழைக்குமாறு கேட்டு கொண்டார். அதைத் தொடர்ந்து மாணவர்கள் தங்களுக்கு இந்த வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்த மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்வின்போது எலைட் சிறப்பு பயிற்சி ஒருங்கிணைப்பாளர் நவநீத கிருஷ்ணன் உடனிருந்தார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close