Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக மாற்றுவதற்கான போராட்டம்: பெருகும் ஆதரவு!  

தமிழக உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாகத் தமிழை கொண்டுவர தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி மதுரையில் வழக்கறிஞர்கள், தமிழ் உணர்வாளர்கள் ஒன்பது பேர் நடத்திவரும் காலவரையற்ற பட்டினிப் போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள், தனி நபர்கள் தினந்தோறும் ஆதரவு அளித்து வருகின்றனர். 


ஆறாவது நாளான இன்று தி.மு.க. சார்பாக முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் போராட்ட மேடைக்கு வந்து, உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டுவர தி.மு.க ஆட்சியில் செய்த முயற்சிகளை குறிப்பிட்டும், பட்டிணிப்  போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் பேசினார். இதேபோல போராட்டத்துக்கு  ஆதரவளிக்க வந்துகொண்டிருந்த த.பெ.தி.க தலைவர் கொளத்தூர் மணியை, மதுரையில் சில சமூக அமைப்புகள் எதிர்த்து வருவதால், அவரை மதுரைக்குள் நுழைய விடாமல் காவல்துறை தடுத்துவிட்டனர். இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுட்டிருந்த வழக்கறிஞர் முருகன் என்பவர் மயக்கமடைய அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதனால் போராட்டம் இன்னும் தீவிரமடைந்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close