Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முரசொலி பவளவிழாவில் கலந்துகொள்ளவில்லை..! தமிழிசை சௌந்தர்ராஜன் அறிவிப்பு

முரசொலி பவளவிழா நிகழ்வில் கலந்துகொள்ள இயலவில்லை என்ற பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். 

tamilisai soundrajan


முரசொலி பவளவிழா நிகழ்ச்சி குறித்து தமிழிசை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'முரசொலி பவளவிழா அழைப்பிதழ் கிடைக்கப்பெற்றேன். அண்ணன் ஸ்டாலின் அவர்களின் அன்பான அழைப்பிற்கு நன்றி. டாக்டர்.கலைஞரால் தோற்றுவிக்கப்பட்ட முரசொலி இதழ் 75 ஆண்டுகள் கடந்தும் மிகவும் வலிமையானதொரு இதழாக கழகத்தின் போர்வாளாக வெளிவந்து கொண்டிருப்பதுடன், தமிழக அரசியல் வரலாற்றில் சிறப்பானதொரு இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. முரசொலி பவளவிழா சீரும் சிறப்புமாக நடைபெற்று முரசொலி நாளிதழின் தாக்கம் அரசியல் வானில் மேலும் பல முத்திரைகளை பதித்திட வேண்டும். தலைவர் கலைஞர் அவர்கள் மீண்டும் பூரண நலத்துடன் எழுதுகோல் எடுத்து எழுத்து கோலாச்ச வேண்டும் என்று நான் வணங்கும் கடவுளை பிரார்த்தனை செய்கிறேன். பா.ஜ.க தேசியத் தலைவர் விரைவில் தமிழகம் வரவிருப்பதாலும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவேண்டியுள்ளதாலும் முரசொலி பவளவிழா நிகழ்வில் கலந்துகொள்ள இயலவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close