Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வாஷிங்டன் சுந்தர் சதம்... தூத்துக்குடி அணி வெற்றி! #TNPLUpdate

தமிழ்நாடு பிரீமியர் லீக் 2017ஆம் ஆண்டு தொடருக்கான 12-வது போட்டி செவ்வாய்கிழமை, திருநெல்வேலியில் உள்ள இந்தியா சிமெண்ட் நிறுவன மைதானத்தில் நடந்தது. இதில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் மற்றும் ஆல்பர்ட் டூட்டி பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின.

வாஷிங்டன் சுந்தர்

டாஸ் வென்ற ஆல்பர்ட் டூட்டி பேட்ரியாட்ஸ் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய டூட்டி பேட்ரியாட்ஸ் அணியினர் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். அபாரமாக ஆடிய வாஷிங்டன் சுந்தர் 29 பந்துகளில் அரைச்சதம் கடந்தார்.

அணியின் ஸ்கோர் 107ஆக இருந்தபோது கௌசிக் காந்தி 35 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் தினேஷ் கார்த்தி கோல்டன் டக் அவுட்டானார். இரு விக்கெட்டுகளையும் ஆர்.அலெக்ஸார்ண்டர் கைப்பற்றினார்.

அபாரமாக ஆடிய வாஷிங்டன் சுந்தர் 59 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். இதன் மூலம் இந்த சீசனில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமை பெற்றார் வாஷிங்டன். இறுதியில் அவர் 61 பந்துகளில் 107 ரன்களில் [11 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்]  வெளியேறினார். 20 ஓவர்கள் முடிவில் ஆல்பர்ட் டூட்டி பேட்ரியாட்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் குவித்தது.

சேப்பாக்கம் அணி தரப்பில் ஆர்.அலெக்ஸாண்டர் 4 ஓவர்கள் வீசி 22 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

பின்னர் 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சேப்பாக்கம் அணி, 2 ரன்களை எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. ஆனாலும் தலைவன் சற்குணம் மற்றும் ஆண்டனி தாஸ் இருவரும் இணைந்து அணியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 60 ரன்கள் குவித்தனர்.

பின்னர், தலைவன் சற்குணம் 19 ரன்களில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து அரைச்சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆண்டனி தாஸ் 27 பந்துகளில் [4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள்] 43 ரன்கள் அடித்து அவுட்டானார். தொடர்ந்து விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழ சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி. 20 ஓவர்கள் முடிவில் சேப்பாக்கம் அணி 8 விக்கெட் இழப்பக்கு 151 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் தூத்துக்குடி அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

சதம் அடித்ததோடு ஒரு விக்கெட் வீழ்த்திய வாஷிங்டன் சுந்தர் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த சீசனில் அதிக விக்கெட்டுகள் மட்டுமல்லாது அதிக ரன்கள் அடித்தவர்கள் வரிசையிலும் முதலிடத்தில் உள்ளார் வாஷிங்டன் சுந்தர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close