Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு..! கொட்டும் மழையில் பெண்கள் போராட்டம்..!

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகிலுள்ள தோணுகாலில் டாஸ்மாக் கடை அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொட்டும் மழையில் பெண்கள் குடைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

tasmac

கோவில்பட்டி நகரில் இயங்கி வந்த டாஸ்மாக் கடை மாற்றப்பட்டு சாலைப்புதூர் விலக்கு – ஆலம்பட்டிக்கு இடையில் தோணுகால் சாலையில் அமைக்கப்படுவதற்க்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வழியேதான் மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கும், ஆண்கள், பெண்கள் வேலைகளுக்கும் சென்று வந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் டாஸ்மாக்கடை அமைத்தால் பெரும் இடையூறும், நாளுக்கு நாள் பிரச்சினைகளும் ஏற்படும் எனக்கோரி இப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க கூடாது என கடந்த இரண்டு மாதமாகவே இப்பகுதி பெண்கள் பல்வேறு போராட்டம் நடத்திவந்தனர். 

கோவில்பட்டி கோட்டாச்சியர் அலுவலகம் வரை பேரணியாக சென்று மனு அளித்தனர். போராட்டம் நடத்திய சமயத்திலும், மனு கொடுத்தவுடனும் சில நாள்கள் கடை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டிருந்தது. பின்னர், மக்கள் எதிர்ப்பை மீறி மதுக்கடை திறக்க ஏற்பாடு செய்துள்ளது.  

இந்நிலையில் இன்று, புதிதாக தொடங்கப்படவுள்ள இக்கடைக்கு மதுபாட்டில்கள் இறக்கி அடுக்கி வைக்கப்படுவதாக தகவல் தெரிந்ததையடுத்து இப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கடைக்கு முன்பு திரண்டு கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மழை பெய்யத் துவங்கியது. இருப்பினும் குடையை பிடித்துக் கொண்டு கொட்டும் மழையில் தரையில் அமர்ந்து தங்கள் போரட்டத்தைத் தொடர்ந்தனர். சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாகத் தொடர்ந்தது அவர்களது போராட்டம்.

கோவில்பட்டி  வட்டாச்சியர் ஜான் தேவசகாயம் மற்றும் போலீசார் கடையை அகற்றிட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் இச்சாலையில் சுமார் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.       

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close