Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மதுரை தனியார் ஓட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே சுற்றுலாப் பயணிகள் அதிகளவு தங்கும் ஓட்டல்கள் உள்ளன. இதன் அருகில் மீனாட்சி அம்மன் கோயில் உள்ளது. மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருகிறவர்கள் இங்குள்ள ஹோட்டல்களில் தங்கிச் செல்வது வழக்கம். நேற்று இரவு இங்கு அமைந்துள்ள மதுரை ரெசிடென்ஸி என்ற ஓட்டலில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் கடிதம் வந்தது. அதையடுத்து திடீர்நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து காவல்துறையினரும், வெடிகுண்டு தடுப்புப் படையும் ஹோட்டல் முழுவதும் சோதனை செய்தனர்.

எந்தவொரு சந்தேகமான பொருளும் கண்டுபிடிக்க முடியவில்லை.  இந்த ஹோடட்லின் உரிமையாளர் த.மா.கா.வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.கே.ராஜேந்திரன் ஆவார். அவருக்கு தொழில் ரீதியாக பிடிக்காதவர்கள் யாரும் இந்த  வேலையை செய்திருக்கலாம் என்று  காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close