Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கதிராமங்கலம், நெடுவாசல் மக்களுக்கு ஆதரவாக மனிதச் சங்கிலிப் போராட்டம்

கதிராமங்கலம், நெடுவாசலில் போராடும் மக்களுக்கு ஆதரவாகவும், குண்டர் சட்டத்தில் கைதுசெய்யபட்ட வளர்மதி, திருமுருகன் காந்தி ஆகியோரை விடுதலை செய்ய வேண்டும் எனவும், கதிராமங்கலத்தில் போராடிய பேராசிரியர் ஜெயராமன் உள்ளிடோர்களை விடுவிக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை முன் வைத்தும், விவசாயத்தைப் பாதிக்கும் நாசாகார திட்டங்களைக் கைவிடும்படியும் இயற்கை பாதுகாப்புக் குழு சார்பாக மதுரையில் இன்று மாலை மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது. 

இப்போராட்டத்துக்கு போலிஸ் அனுமதி தராத நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டதன் மூலம்  மதுரை அண்ணாநகரில் சுகுணா ஸ்டோர் முதல் அம்பிகா திரையரங்கம் வரை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு இயற்கை பாதுகாப்புக் குழு சார்பில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது, போராட்டத்தில் 300-க்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்டு இத்திட்டங்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close