Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னையில் 15 நாள்கள் காவிரிகுறித்த தன்னோவியக் கண்காட்சி!

ன்றைக்கு வறண்ட நிலமாகக் காட்சியளிக்கும் காவிரி ஆறு, ஒரு காலத்தில் செழுமையுடன் சிறந்து விளங்கியது. இதைச் சித்திரிக்கும் வகையில் ஓவியர் கேசவன் பல ஓவியங்களைத் தீட்டியுள்ளார். இந்த ஓவியத் தொகுப்பு, “தென்நதி தென்றல்” என்ற தலைப்பில் சென்னையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சென்னை எழும்பூரிலுள்ள அம்பாசிடர் பல்லவா விடுதியின் லா கேலரி - கலை அரங்கில் இன்று மாலை இந்தக் கண்காட்சி தொடங்கப்பட்டது. இதைக் காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் கலந்துகொண்டு தொடங்கிவைத்தார். ஓவிய ஆசிரியர் ஜனாதிபதி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

காவிரி ஓவியக் கண்காட்சி

இந்த ஓவியக் கண்காட்சியைத் தொடங்கிவைத்து பெ. மணியரசன் பேசும்போது, “மக்கள் உயிர் வாழவும்  நாகரிகம் வளரவும் அடிப்படைத் தேவையாக உள்ள ஆற்றைக் காட்சிப்படுத்தியிருப்பது ஒரு நல்ல முயற்சி. காவிரி ஆற்றின் போக்கை காட்சிப்படுத்துகின்றன இந்த ஓவியங்கள். இளைஞர்கள் பின்பற்றுவதற்கு மட்டுமல்ல, வழிகாட்டுவதற்கும் உரியவர்கள் என்று நான் தொடர்ந்து கூறிவருகிறேன். அதற்கேற்ற நல்ல முயற்சி இந்த ஓவியங்கள். காவிரி ஆறு குறித்து நம் இலக்கியங்களில் நல்ல பதிவுகள் உள்ளன. அதைத் தன் வழியில் ஓவியர் கேசவன் வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கு நம் பாராட்டுகள்!” என்று பேசினார்.

கண்காட்சி

கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் க.சி. நாகராசன், சென்னை ஆசான் நினைவு மெட்ரிக் மேனிலைப் பள்ளி முதல்வர் சுனிதா விபின்சந்திரன், துணை முதல்வர் ஜோதிமேனன், பெல் நிறுவன முன்னாள் முதன்மை நிர்வாக அதிகாரி க.துரைக்கண்ணு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிறைவில், ஓவியர் வீ. கேசவன் ஏற்புரையாற்றினார்.

ஆகஸ்ட்  1 முதல் 15 வரை நாள்தோறும் காலை 11.30 மணி முதல், மாலை 7 மணி வரை ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்படுகின்றன. விற்பனையும் செய்யப்படுகின்றன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close