Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மயிலாடுதுறையில் காவிரி புஷ்கரம் திருவிழா

நாகை மாவட்டம் மயிலாடுதுறை துலாகட்ட காவிரியில், எதிர்வரும் செப்டம்பர் 12-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை காவிரி புஷ்கரத் திருவிழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது.  

காவிரிபுஷ்கரம்

புஷ்கரத் திருவிழா, ஒவ்வொரு வருடமும் குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயரும்போது, அந்தந்த ஜெகவீரபாண்டியன்ராசிக்கு உரிய நதிகளில் நடைபெறும் விழாவாகும். மூன்றரைக்கோடி தீர்த்தங்களுக்கு அதிபதியான பிரம்மாவின் கமண்டலத்திலிருக்கும் புஷ்கரமானவர், குருப்பெயர்ச்சி சமயங்களில் அந்தந்த ராசிக்கு உரிய நதிகளில் 12 நாள்கள் பிரவேசம் செய்வதாக ஐதீகம். அதன்படி, குருபகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு இடம்பெயரும்போது, துலாம் ராசிக்கு உரியவரான காவிரி நதியில் இந்த விழா கொண்டாடப்படுகிறது.  

இதுகுறித்து காவிரிபுஷ்கரம் விழா கமிட்டியின் துணைத் தலைவர், மயிலாடுதுறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., ஜெகவீரபாண்டியனிடம் பேசுகையில், ‘‘ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் கடைமுழுக்கு நாளில், மயிலாடுதுறை துலாகட்ட காவிரியில் புனித நீராடினால் சிறப்பு.  இந்தியாவிலுள்ள அனைத்து நதிகளும் அந்நாளில் தங்களது பாவம்போக்க இங்கே வந்து நீராடும் என்பது ஐதீகம். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்த விழாவிற்குக்கூட காவிரியில் நீரில்லை.  கடந்த ஆண்டு, தற்காலிகத் தடுப்பு கட்டி, போர்வெல் மூலம் நீர்பாய்ச்சி புனித நீராடல் நடைபெற்றது. எனவேதான், தற்போது நிரந்தரமாக எப்போதும் இங்கு பக்தர்கள் நீராடும் வகையில் இருபுறமும் தடுப்பணைகட்டி, அடித்தளமிட்டு, கரைகளைச் சீரமைத்து போர்வெல்மூலம் வேதாந்தா ஆனந்தாஎப்போதும் தண்ணீர் இருக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன. இதற்கு தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் நிதியும், பக்தர்கள் ஒரு கோடி ரூபாய் நிதியும் அளிக்க உள்ளனர். அதன்படி பணிகள் வெகுவிரைவாக நடைபெற்றுவருகின்றன’’ என்றார். 

துறவியர்கள் ஒருங்கிணைப்பாளர், சுவாமி வேதாந்தா ஆனந்தாவைச் சந்தித்தபோது, ‘‘இந்த முறை வருகின்ற குருபெயர்ச்சி 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிற அன்னை காவிரியின் மகாபுஷ்கர விழாவாகும். இந்த நாள்களில், குடும்பத்துடன் மனமகிழ்வுடன் காவிரித் தாய்க்கு மஞ்சள் தூள், புஷ்பம் சமர்ப்பணம் செய்து, குலதெய்வம், இஷ்டதெய்வம் மற்றும் முன்னோர்களை வணங்கி நீராடவேண்டும்.  உலக நதிகளிலேயே மிகவும் புண்ணிய நதியான காவிரிக்கரையில் பிறந்து வளர்ந்து, வாழ்ந்துவரும் நாம், இந்தப் பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்தி புனிதம் அடைவோமாக.  அன்னை காவிரியின் மகாபுஷ்கரத்தில் கங்கையும் 66 கோடி புண்ணிய தீர்த்தங்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்தி எண்ணாயிரம் ரிஷிமார்களும், பதினெண் சித்தர்பெருமக்களும் வாசம்செய்வதால், நாம் நீராடி வழிபாடுசெய்து, மாலை நேரத்தில் ஆரத்தி செய்வதால் நமது பாவங்கள் தீர்ந்து வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும். இதை, பக்தர்கள் தவறாது பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’’ என்றார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close