Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டெல்லியில் முகாமிட்டிருக்கும் புதுச்சேரி அமைச்சர்கள்...

ஆளுநருக்கும் அமைச்சரவைக்குமான அதிகார மோதல், நியமன எம்.எல்.ஏ-க்கள் சர்ச்சைகளுக்கு நடுவில் புதுச்சேரி முதல்வர் உட்பட அனைத்து அமைச்சர்களும் டெல்லியில் முகாமிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி

புதுச்சேரியில், காங்கிரஸ் தி.மு.க கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து ஆளுநர் கிரண்பேடிக்கும் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் இடையே கடும் பனிப்போர் நிலவிவருகிறது. காங்கிரஸ் தலைமையிலான அரசு பதவியேற்று ஒரு வருடம் கடந்த நிலையிலும், பெரியதாக எதுவும் மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு மீது கடும் அதிருப்தி நிலவிவருகிறது.

விவசாயிகள், கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன்கள் தள்ளுபடி, தாழ்த்தப்பட்ட மாணவர்களின் உயர் படிப்புகளுக்கான முழுக் கல்வி உதவித்தொகைக்கு அனுமதி கேட்டு, மாநில அரசு கிரண்பேடிக்குக் கோப்புகளை அனுப்பியது. ஆனால், மத்திய அரசின் அனுமதியில்லாமல் கோப்புகளில் கையெழுத்திட முடியாது என்றும் கூறிய கிரண்பேடி, அந்தக் கோப்புகளை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பினார். அதேபோல காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட 7 எம்.எல்.ஏ-க்களின் வாரியத் தலைவர் பதவிகளுக்கான காலக்கெடு கடந்த மாதம் முடிவடைந்தது. ஆனால், கடந்த ஒரு வருடத்தில், சம்பந்தப்பட்ட வாரியங்களில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்று கூறி, அந்தப் பதவிகளை நீட்டிக்கவும் அனுமதி வழங்கவில்லை. அது தொடர்பான கோப்புகளையும் மத்திய அரசுக்கு அனுப்பிவைத்தார் கிரண்பேடி.

ஏற்கெனவே நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்த அரசுக்கு, இது மேலும் சிக்கலை ஏற்படுத்தியது. இப்படிப் பல கோப்புகள் கிரண்பேடி மற்றும் மத்திய அரசின் அனுமதிக்காகத் தேங்கிக் கிடக்கின்றன. நியமன எம்.எல்.ஏ-க்கள் விவகாரம், நீட் தேர்விலிருந்து விலக்கு, 95 மருத்துவ முதுநிலை மாணவர்கள் நீக்கம் உள்ளிட்ட பல பிரச்னைகள் மாநில அரசுக்குத் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால், பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களைச் சந்தித்து இவைகளுக்குத் தீர்வு காணவும், தேங்கியிருக்கும் மக்கள் நலத் திட்டங்களுக்கான கோப்புகளுக்கு அனுமதி பெறவும், முதல் அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அனைத்து அமைச்சர்களும் டெல்லியில் முகாமிட்டிருக்கிறார்கள். பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவரை சந்திக்க அனுமதி கிடைத்தவுடன், ஆளுநர் கிரண்பேடி குறித்தும் புகார் அளி்ப்பார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close