Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'துணைவேந்தர் தேர்வு நிர்பந்தத்தால் நடக்கவில்லை!' - குற்றச்சாட்டை மறுக்கும் அமைச்சர்!

'மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் செல்லதுரை நியமனம் நிர்பந்தத்தால் நடந்தது இல்லை' என அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

கே.பி.அன்பழகன்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் செல்லதுரை நியமனத்துக்கு, பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துவந்தனர். இந்நிலையில், துணைவேந்தர் நியமனத்தை எதிர்த்து, மதுரை, எஸ்.எஸ்.காலனியைச் சேர்ந்த அந்தோணிராஜ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல்செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள், பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

இதுகுறித்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, துணைவேந்தர் தேர்வுக் குழு உறுப்பினர்களான ஹரீஷ் மேத்தா மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், நிர்பந்தத்தால் மட்டுமே துணைவேந்தரைத் தேர்வுசெய்தோம் எனப் பதில் அளித்திருந்தனர். இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து, தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறுகையில், ‘மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனம் நிர்பந்தத்தால் நிகழ்ந்தது என அதிகாரிகள் கூறுவது பொய்யானது. நியமனத்தில் தேர்வுக்குழு தலையீடு இருந்ததாகக் கூறும் தகவல் தவறானது. தவறான, பொய்த் தகவல்கள் அளித்தவர்கள் மீது வழக்கு முடிந்த பின்னர் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்’ எனக் கூறினார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close