Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை: குளிரப்போகும் தமிழகத்தின் நிலை!

வளி மண்டலத்தில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் அடுத்த மூன்று நாள்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மழை

கோடை காலம் முடிந்து, தென் மேற்குப் பருவமழை தொடங்கியது. ஆரம்பத்தில் சற்று வெப்பம் குறைந்து, மழைப் பொழிவு இருந்தது. ஆனால், கடந்த சில வாரங்களாகத் தமிழகத்தில் வெப்பம் அதிகரித்துக் காணப்படுகிறது. வெப்பச்சலனம் காரணமாக அவ்வப்போது மழை பெய்தாலும், தொடர்ச்சியாக மழை இருப்பதில்லை. குறிப்பாக, தென்மேற்குப் பருவமழை சராசரி அளவைவிட 38 சதவிகிதம் குறைவாகப் பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தற்போது வளி மண்டலத்தில் மையம் கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலையால் தமிழகத்தில் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்று தமிழகத்தின் உள்மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. சென்னையைப் பொறுத்தவரையில் இன்று காலையில் புறநகர்ப் பகுதிகளில் மழை பெய்தது. 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close