Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஹால்ஸ் மிட்டாய் சாப்பிடுறீங்களா? உங்களுக்கு ரேஷன் கார்டு கட்! #MayHappen

நான்கு சக்கர மோட்டார் வாகனம் வைத்துள்ள குடும்பங்கள், குளிர்சாதன கருவி வைத்துள்ள குடும்பங்கள், ஆண்டு வருமானம் 1 லட்சத்துக்கும் அதிகமாக உள்ள குடும்பங்களின் ரேஷன் கார்டு ரத்து என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அடுத்து வரும் நாள்களில் வேறு என்ன காரணங்களுக்காக எல்லாம் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என கொஞ்சம் முன்னோக்கி சிந்தித்ததில்...

ரேஷன் கார்டு

  • தென்மேற்கு பருவக்காற்று தேனி பக்கம் வீசுவதுபோல் சிலுசிலுனு காற்று தரும் டேபிள் ஃபேனோ, குளுகுளுனு குளிர்ச்சி குளிர்ச்சி கூல் கூல் தரும் வேப்பமரமோ வீட்டில் இருந்தால், குடும்ப அட்டை ரத்து செய்யப்படும். அதுவும் ஹால்ஸ் மிட்டாய் சாப்பிட்டு தண்ணீர் குடிப்பவர்களின் குடும்ப அட்டை உடனே ரத்து செய்யப்படும். ஐஸ் ஹவுஸ் ஏரியாவில் இருப்பவர்கள், ரேஷன் கார்டைப் பற்றி யோசித்துக்கூட பார்க்கக்கூடாது.
  • சொந்த டேட்டாவை செலவு செய்து ஓவியாவுக்கு ஓட்டு போடுபவர்களின் ரேஷன் கார்டு, உடனே ரத்து செய்யப்படும். அ.தி.மு.க - வைச் சேர்ந்த வையாபுரிக்கோ, பா.ஜ.க-வை சேர்ந்த காயத்ரிக்கோ ஓட்டு போடுபவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது.
  • வீட்டில் ஓடாத, செயின் அறுந்த சைக்கிள் வைத்திருந்தால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும். அதேபோல் வீட்டிலுள்ள குழந்தைகள், கதவு திறக்கும் வசதி கொண்ட ரிமோட் கார் வைத்திருந்தாலும் ரத்து செய்யப்படும். பின்னால் இழுத்து விட்டால் ஓடும் பிளாஸ்டிக் கார்கள் வைத்திருப்பவர்கள் பயப்பட வேண்டாம்.
  • தியேட்டரில் 150 ரூபாய் கொடுத்து பார்ப்பவர்களின் ரேஷன் கார்டுகள், டிக்கெட் கவுன்டர் அருகில் இருக்கும் `குடும்ப அட்டை ரத்து சிறப்பு முகாம்கள்' மூலம் தடை செய்யப்படும். மேலும், சென்ற மாதம் நீங்கள் வாங்கிய அரிசி, சர்க்கரை மீதம் இருந்தாலும் கையகப்படுத்தப்படும்.
  • ஃப்ரெஷ் ஜூஸ் கடைகளில் கிவி, மங்குஸ்தான், டிராகன் ஃப்ரூட் போன்ற வினோதமான ஜூஸ்களை ஆர்டர் செய்பவர்களின் குடும்ப அட்டையும் ரத்து செய்யப்படும். சமத்தாக சாத்துக்குடி ஜூஸ் குடிப்பவர்கள் அச்சப்படத் தேவையில்லை.

ஃப்ரெஷ் ஜூஸ்

  • டாஸ்மாக்கில் சரக்கடிக்காமல் குடும்பத்துக்காக பணம் சேமித்து வைக்கும் நல்ல குடிமகன்களின் குடும்ப அட்டையும் ரத்து செய்யப்படும். தினமும் டாஸ்மாக்கே கதி என கிடந்து, அரசுக்கு வருமானம் கொடுக்கும் `குடி'மகன்களுக்கு எக்ஸ்ட்ரா ஐந்து லிட்டர் மண்ணெண்ணை ஊற்றப்படும். ஊ ஊ ஊ....
  • இனி துணிக்கடைகளில் துணி வாங்கிவிட்டு, ‘கட்டை பை’க்கு சண்டைப்போடாத குடும்பங்களின் குடும்ப அட்டையும் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியாகலாம். பால் பாயாசமோ, பாசிப் பருப்பு பாயாசமோ... முந்திரி, திராட்சை, ஏலக்காய் அதிகம் போட்டு சமைப்பவர்களின் குடும்ப அட்டையும் ரத்து செய்யப்படும். `பால் பாயாசம் எங்கடா?' என ஆதங்கப்பட்டவர்கள் அனைவரும் `ரேஷன் கார்டு எங்கடா?' என ஆதங்கப்படும் நாள் வெகுதூரமில்லை. ஆமப்பே...
  • தாழ்தள சொகுசு, தொடர் மற்றும் குளிர்சாதன பேருந்துகளில் பயணிப்பவர்களின் குடும்ப அட்டையும் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது. அதிலும், பாக்கி சில்லறை 1 ரூபாய், 2 ரூபாயை வாங்கச் சங்கடப்படுபவர்களின் குடும்ப அட்டை ரத்து செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது. ஹ்ம்ம்...
  • ‘நீட்' பயிற்சி வகுப்புக்குச் செல்லும் மாணவர்கள், மாநிலத்தின் நலனுக்காக போராடுபவர்கள், மீம் க்ரியேட்டர்கள் மற்றும் எரிவாயு சிலிண்டர் வைத்திருக்கும் குடும்பங்களின் குடும்ப அட்டைகளும் ரத்து செய்யப்படும். உஷாரய்யா... உஷாரு...

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close