Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'கர்நாடகா ரிசார்ட்டில் நடந்தது கூவத்தூரில் நடக்காதது ஏன்?'- மு.க.ஸ்டாலின் ஆவேசம்

குஜராத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கர்நாடகாவில் இருக்கும் ரிசார்ட்டில் தங்கியுள்ளனர். அங்கு இன்று வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள நிலையில், இது குறித்து தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் காட்டமாக ட்விட்டரில் பதிவுசெய்துள்ளார்.  

மு.க.ஸ்டாலின்

குஜராத் மாநிலத்தில், வரும் 8-ம் தேதி, மாநிலங்களவைக்கான உறுப்பினர் தேர்தல் நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக, காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் சிலர் பா.ஜ.க-வுக்கு தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர். மீதம் இருக்கும் எம்.எல்.ஏ-க்களிலும் சிலர் கட்சி தாவலாம் என்று பேசப்பட்டது.  இதனால், காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ-க்களைத் தாங்கள் ஆளும் மாநிலமான கர்நாடகாவில் உள்ள ஒரு தனியார் விடுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தங்கவைத்துள்ளனர். அவர்கள் அனைவரும் மாநிலங்களவைத் தேர்தலுக்குதான் நேரடியாக வந்து வாக்களிப்பார்கள் என்று காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டது. இந்தச் சம்பவம், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை முதல் குஜராத் எம்.எல்.ஏ-க்கள் தங்கியிருக்கும் ஈகிள்டன் கோல்ப் ரிசார்ட்டில், வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். அதேபோன்று, கர்நாடக மாநில எரிசக்தித்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார்  வீட்டிலும் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தச் சம்பவம், கர்நாடக மற்றும் குஜராத் மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஈகிள்டன் கோல்ப் ரிசார்ட்டில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து ட்விட் செய்துள்ளார். அதில், 'குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் தங்கியுள்ள இடங்களில் ரெய்டு நடத்தும் வருமான வரித்துறை கூவத்தூரில் குதிரை பேரம் நடந்தபோது வேடிக்கை பார்த்தது ஏன். சுதந்திரமான வருமான வரித்துறையை, கூவத்தூர் பக்கமே எட்டிப்பார்க்க விடாமல் ‘கூண்டுக் கிளி’ போல் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு அடைத்து வைத்ததா. புதுச்சேரியில் முதல்வருக்காக பதவி விலகிய எம்.எல்.ஏ வீட்டில் ரெய்டு செய்த வருமான வரித்துறை ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆதரவாளர்கள் மீது ஏன் சந்தேகத்தை எழுப்பவில்லை. வருமான வரித்துறை, சி.பி.ஐ போன்ற அமைப்புகளை பா.ஜ.க-வின் அரசியல் எதிரிகளுக்கு எதிராகப் பயன்படுத்துவதை பிரதமர் தடுத்து நிறுத்த முன்வர வேண்டும்' என்று காட்டமாக பதிவுசெய்துள்ளார். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close