Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வங்கிக் கணக்கில் மூன்று ரூபாய்!- போலீஸ் எஸ்.ஐயை கலாய்த்த வங்கி அதிகாரி

வங்கியில் சேமிப்புக்கணக்கு இருப்பு குறித்து விசாரிக்கச் சென்ற காவல்துறை உதவி ஆய்வாளரை வங்கி அதிகாரி மரியாதை குறைவாக பேசியுள்ளார். இதுகுறித்து அந்த உதவி ஆய்வாளர் புகார் அளித்தபோதும் காவல்துறையே அதை ஏற்க மறுத்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

காவல்துறை அதிகாரி

சென்னை அமைந்தகரை காவல் நிலையத்தில் ராஜ்குமார் என்பவர் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் அதே பகுதியில் செயல்பட்டுவரும் இந்தியன் வங்கியில் சேமிப்புக் கணக்கு ஒன்றைத் தொடங்கி, கடந்த சில வருடங்களாக அதன்மூலம் பணப்பரிவர்த்தனை செய்து வருகிறார். இந்தச் சூழலில் அவர்,  காசோலை புத்தகம் கேட்டு மேற்படி வங்கிக் கிளைக்கு நேற்று சீருடையுடன் நேரில் சென்று அங்கு பணியிலிருந்த பெண் ஊழியரிடம் விண்ணப்பம் அளித்ததாகத் தெரிகிறது. அப்போது அவரது சேமிப்புக் கணக்கை ஆய்வுசெய்த அந்த பெண் ஊழியர் கணக்கில் 3 ரூபாய் மட்டும் உள்ளதாக கூறினாராம். அப்போது காவல் உதவி ஆய்வாளர் தனது சேமிப்புக் கணக்கில் மொத்தம் 503 ரூபாய் இருப்பு உள்ளது என்று கூறினாராம். அதற்கு அந்த பெண் ஊழியர் உங்களது கணக்கில் ரூபாய் 503 இருந்த நிலையில் கணக்கு ஹோல்டு செய்யப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.

வங்கி நடவடிக்கையை ஏற்றுக்கொண்ட காவல்துறை உதவி ஆய்வாளரிடம் வங்கி பெண் ஊழியர் ஒருவர் மரியாதை குறைவான வார்த்தைகளில் பேசியுள்ளார். சீருடை அணிந்த காவல்துறை அதிகாரி என்றும் பாராமல் அந்த பெண் ஊழியர் ‘எனக்கு காவல்துறையில் இதைவிட பெரிய ஆட்களைத் தெரியும்' என இறுதிவரையில் மரியாதை குறைவாகவே பேசி வந்துள்ளார்.

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close