Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஃப்ரீ டேட்டா, குறைந்த விலை ப்ளான்கள் விரைவில் முடிவுக்கு வரப்போகிறது': எஸ் அண்ட் பி

ரிலையன்ஸ் ஜியோ அதிரடி ஆஃபர்களுடன் சந்தையில் களமிறங்கியதால் அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் ஆஃபர்களை அறிவித்தன. அவையெல்லாம் விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என்று எஸ் அண்ட் பி குளோபல் ரேட்டிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ஜியோ

ஜியோ வருகையினால் ஏர்டெல், ஐடியா உள்ளிட்ட அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் தங்களுடைய மொபைல் சேவை திட்டங்களின் கட்டணங்களைக் குறைத்துக்கொண்டதோடு, பல்வேறு ஆஃபர்களையும் அள்ளி விட்டன. காரணம் ஜியோவின் இலவச அதிரடி ஆஃபர்களால் தங்களின் வாடிக்கையாளர் வட்டம் பறிபோய்விடுமோ என்ற பயம். தங்களின் சந்தை மதிப்பைக் காப்பாற்றிக்கொள்ள அவையும் சரிக்குசமமாக ஆஃபர்களை அறிவிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாயின. 

டெலிகாம் நிறுவனங்களின் 80 சதவிகித வருவாய் வாய்ஸ் கால்களில் இருந்து வருகிறது. ஜியோ இதனை முற்றிலுமாக இலவசமாக்கிய நிலையில், டெலிகாம் நிறுவனங்கள் நஷ்டத்தைச் சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன. டெலிகாம் துறையில் கேஷ் ஃப்ளோவும் குறைந்தது. 

விரைவில் இந்த இலவச ஆஃபர்கள் எல்லாம் முடிவுக்கு வந்துவிடும். அதன்பிறகே டெலிகாம் நிறுவனங்கள் தங்களின் உண்மையான வருவாயை ஈட்ட முடியும். வரிசைப்படிப் பார்த்தால் முதல் மூன்று இடங்களில் ஐடியா-வோடபோன், ஏர்டெல் மற்றும் ஜியோ உள்ளன. நான்காவது இடத்தில் அரசுக்குச் சொந்தமான பி.எஸ்.என்.எல் உள்ளது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close