Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தலைவிரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு... களமிறங்கிய திண்டுக்கல் கலெக்டர்!

 

திண்டுக்கல் தண்ணீர் தட்டுப்பாடு

திண்டுக்கல் மாவட்டத்தில் தண்ணீர் தட்டுப்பாடு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்கு அதிகாரிகள் போதுமான ஒத்துழைப்பு தராத நிலையில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், வினய் அதிரடியாக களமிறங்கியுள்ளார். வரும் மழைக் காலத்தை மனதில்கொண்டு, கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, மாவட்டத்தில் இருக்கும் குளங்களைத் தூர்வாரி, வரத்து வாய்க்கால்களை சீரமைக்கும் பணியை முடுக்கிவிட்டார். அதன் பலனாக, இன்றைக்கு பெரும்பாலான குளங்கள், மழைநீர் சேமிப்புக்குத் தயார் நிலையில் உள்ளன. திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதிக்கான நீராதாரமான ஆத்தூர் நீர்த்தேக்கத்தில் போதுமான நீர் இல்லாத நிலையில், இருக்கும் நீர் ஆதாரங்களை வைத்து குடிநீர் பிரச்னையைச் சமாளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டும் போதுமான நடவடிக்கை இல்லை. 

‘பல இடங்களில் நிலத்தடி நீர் இருந்தும், போர்வெல்களைப் பராமரிக்காமல் போட்டு வைத்திருப்பதால், அவற்றில் தண்ணீர் எடுக்க முடியவில்லை. உடைந்த குழாய்கள், பழுதான மோட்டார்கள் என சின்னச் சின்ன பிரச்னைகளை சரிசெய்தாலே தற்போது கிடைப்பதை விட, இன்னும் கூடுதலாக தண்ணீரைப் பெற முடியும். ஆனால், அதில் அக்கறை காட்டாமல், அலட்சியமாக இருக்கிறார்கள் அதிகாரிகள்’ என முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி குற்றம் சாட்டியிருந்தார். 

கலெக்டர் வினய் 

நாளுக்கு நாள் நிலைமை மோசமாவதை உணர்ந்த ஆட்சியர், அதிகாரிகளை மட்டும் நம்பிக்கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது என்ற எதார்த்தத்தைப் புரிந்துகொண்டு, தானே களத்தில் குதித்துள்ளார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகள், நீர் இல்லாத கிணறுகள், மோட்டார் பழுதான போர்வெல்கள் என அனைத்தையும் நேரில் சென்று ஆய்வுசெய்து வருகிறார். வாய்ப்புள்ள இடங்களில் புதிதாக போர்வெல் அமைப்பதற்கும், பழுதான மோட்டார்களைச் சரிசெய்யவும், தண்ணீர் இல்லாத கிணறுகளை தூர்வாருமாறும் அதிகாரிகளிடம் அறிவுறுத்துகிறார். இன்று திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், திறந்த நிலையிலுள்ள நீர்நிலைகளை மூடிவைக்கவும், தேவையான இடங்களில் புதிதாக போர்வெல் அமைக்கவும் அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் வினய், ‘‘திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில் வறட்சி நிவாரண நிதியின் கீழ் முதல்கட்டமாக அமைக்கப்பட்ட 15 மினி பவர் பம்புகள் உபயோகத்தில் உள்ளன. இரண்டாம் கட்டமாக அமைக்கப்பட்ட 43 மினி பவர் பம்புகளில், 38 உபயோகத்தில் உள்ளன. மீதமுள்ள 5 பவர் பம்புகள் விரைவில் இயக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.’’ என்றார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close