Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதிக்கு பரோல் கோரிய மனு தள்ளுபடி!

hc

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 26 ஆண்டுகளாக சிறையிலிருக்கும் ரவிச்சந்திரனுக்கு பரோல் விடுமுறை வழங்க உத்தரவிடக்கோரி அவரது தாயார் ராஜேஸ்வரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அம்மனுவில் கூறியிருப்பதாவது, 'எனது மகன் ரவிச்சந்திரன் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 26 ஆண்டுகளாக மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ரவிச்சந்திரனை குடும்ப சொத்து பாகப்பிரிவினைக்காக ஒரு மாதம் பரோல் விடுமுறை வழங்கக்கோரி மதுரை சிறை கண்காணிப்பாளருக்கு மனு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக உள்துறை செயலருக்கும் மனு அனுப்பப்பட்டது. ஆனால், இந்த மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க உத்தரவிட வேண்டும்' என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் மனுதாரரின் மகனுக்கு பரோல் வழங்க மறுத்து மதுரை சரக சிறைத்துறை துணைத் தலைவர் ரா.கனகராஜ் பிறப்பித்த உத்தரவு நகல் தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'ரவிச்சந்திரன் இரு கடுமையான சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டுள்ளார். சாதாரண விடுப்பு பெற தகுதியற்றவர் ஆவார். அதனால்தான் சாதாரண விடுப்பு வழங்கப்படவில்லை' என்று தெரிவித்திருந்தனர்.

இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இருப்பினும் விடுமுறை வழங்க மறுத்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மனுத் தாக்கல் செய்ய மனுதாரருக்கு உரிமை வழங்கப்படுகிறது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close