Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டெங்கு பாதிப்பால் பலியான மாணவன்! பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் தயக்கம்

நெல்லை மாவட்டத்தில் டெங்கு பாதிப்பால் ஒரு மாணவன் பலியானதைத் தொடர்ந்து, தங்களுடைய குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதற்கு பெற்றோர் தயக்கம் காட்டும் நிலைமை உருவாகி இருக்கிறது. 

பலியான சிறுவன்

நெல்லை மாவட்டத்தில் டெங்கு நோயின் பாதிப்பு ஏற்கெனவே இருந்து வந்த நிலையில், தென் மேற்குப் பருவமழை தீவிரம் அடைந்த பின்னர் அதன் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நோயைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத் துறையும் தீவிர நடவடிகை எடுத்தபோதிலும், இதன் தீவிரம் குறைந்தபாடில்லை. அதனால் நெல்லையைச் சுற்றிலும் உள்ள வள்ளியூர், ஆலங்குளம், கடையம், கடையநல்லூர், களக்காடு, சுரண்டை உள்ளிட்ட பகுதிகளில்  இதன் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது.

பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக சிறப்பு வார்டு உருவாக்கப்பட்டு சிகிச்சை அளிக்க வேண்டிய அளவுக்கு நிலைமை தீவிரம் அடைந்துள்ளது. ஆனாலும், சிகிச்சை பெறக்கூடிய நோயாளிகளின் எண்ணிக்கை இதுவரை குறையவில்லை. தற்பொது டெங்கு பாதிப்பு காரணமாக 25-க்கும் அதிகமான நோயாளிகள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுவரும் சூழலில், டெங்கு அறிகுறியுடன் இந்த மருத்துவமனைக்கு வரக்கூடிய நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

நெல்லை மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள குறிப்பன்குளத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரது மகன் முத்துவேல் ராஜன், அருகில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை எடுத்தார். அங்கு அவருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து உயர் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் பள்ளி மாணவரான முத்துவேல் ராஜன் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களாக நெல்லை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த மழையால் பள்ளியில் பயிலும் மாணவர்களில் பலருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு ஏற்பட்டிருப்பது சாதாரண காய்ச்சலா அல்லது டெங்கு பாதிப்பா என்பது தெரியாமல் பெற்றோர் குழப்பத்தில் உள்ளனர்.

பள்ளியில் உடன் பயிலும் மாணவர்களிடம் இருந்து தங்களின் குழந்தைகளுக்கும் டெங்கு பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்கிற அச்சம் பெற்றோருக்கு ஏற்பட்டிருக்கிறது. அதனால் சில பெற்றோர் தங்களது குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். இதனைச் சமாளிக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக களம் இறங்கி டெங்கு நோயை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பள்ளிகளில் தங்களின் பிள்ளைகளுக்கு நோய் பரவும் சூழல் தடுக்கப்பட வேண்டும் என்கிற பெற்றோரின் நியாயமான கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் நிறைவேற்ற வேண்டும் என்பதே பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close