Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிவகங்கையில் சர்ச்சைக்குரிய வட்டாட்சியர் இடமாற்றம்.

சிவகங்கை வட்டாட்சியர் நாகநாதன், அவசர அவசரமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ள சம்பவம், வருவாய்த்துறை ஊழியர்களிடையே முணுமுணுப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  

   நாகநாதன்

சிவகங்கை வருவாய்த்துறை ஊழியர்கள் ஒட்டுமொத்தமாகத் திரண்டு, சிவகங்கை வட்டாட்சியர் நாகநாதன் மற்றும் காரைக்குடி வட்டாட்சியர் கண்ணன் இருவரையும் மாற்றுங்கள். அவர்களுக்கான வட்டாட்சியர் பணிக்கான ஓராண்டு காலம் முடிந்துவிட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் மலர்விழியிடம் முறையிட்டார்கள். மாவட்டத்திலுள்ள மற்ற வட்டாட்சியர்கள் மாற்றப்பட்டார்கள். ஆனால்,  இவர்கள் இருவரையும் ஆட்சியர் மாற்றவில்லை. இவர்கள் மாற்றப்படாததைக் கண்டித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

அந்த அளவுக்கு பவர்ஃபுல் வட்டாட்சியராக வலம்வந்தவர், நாகநாதன். இவர், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் உறவினர் என்று சொல்லப்பட்டது. இவர்தான் உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் வாங்கிக்கொடுக்கிறார். ஆகையால்தான் இவரை வேறு இடத்துக்கு மாற்றாமல் இருக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. எப்போதுமே, ஒரு வட்டாட்சியர் ஒரு வருடம் முடிந்தவுடன் மாற்றப்பட வேண்டும் என்பது விதி.  இந்த விதிக்கு மாறாக ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் அசைக்க முடியாதவராக வலம்வந்தவர் நாகநாதன்.  இவர்,ஏற்கெனவே மாற்றப்பட்டிருந்தால், வருவாய்த்துறை ஊழியர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவருக்கும் முரண்பாடு ஏற்பட்டிருக்காது.

வருவாய்த்துறை ஊழியர்கள் சங்கத்துக்குள் அடிதடி நடந்திருக்காது. ஆட்சியரைக் கண்டித்து மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்திருக்காது. இவ்வளவு பிரச்னைகளுக்கு இடையிலும் நாகநாதன் மாற்றப்படவில்லை. ஆனால் இப்போது, அவரச அவசரமாக காரைக்குடி சிப்காட் நிலஎடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டிருக்கிறார். அந்த மர்மம், அவிழாத முடிச்சாக வருவாய்த்துறையினரிடம் இருந்தாலும், ஒரு சில செய்திகள் கசியத்தொடங்கியிருக்கின்றன. அதாவது, புதுக்குளம் கண்மாயில் உள்ள சீமைக்கருவேல மரங்களை வெட்டுவதற்கு நாகநாதனுக்குத் தனியாக கவனிக்கப்பட்டிருக்கிறது. உயர் நீதிமன்றத் தடை இருந்ததால், அந்த சீமைக்கருவேல மரங்களை வெட்ட முடியவில்லை.

நீதிமன்றத் தடை நீங்கியதும் மரங்களை வெட்டிக்கொள்ள ஆர்டர் கேட்டதில், அதிகமாக எதிர்பார்த்ததாகவும் அந்தச் சம்பவங்களை அப்படியே வீடியோ பதிவுசெய்து லஞ்சஒழிப்புத்துறைக்கு அனுப்பியதாகவும், அதனடிப்படையிலேயேதான் அவசர அவரசமாக நாகநாதன் இடமாற்றம் செய்யப்பட்டார் என்றும் சொல்லப்படுகிறது. தாசில்தார் டிமாண்ட் வைத்த வீடியோ, எந்த நேரத்திலும் வெளியாகலாம்' என்கிறார்கள். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close