Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆசியாவின் நோபல் பரிசான ரமோன் மகசேசே விருதுபெறும் தமிழச்சி!

சியாவின் நோபல் பரிசான 'ரமோன் மகசேசே' விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு பேரில் ஒருவராக, 82 வயதான தமிழாசிரியர் கெத்சீ சண்முகம் உள்ளார்.

மகசேசே விருது பெறும் கெத்சீ சண்முகம்

பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபராக இருந்தவர், ரமோன் மகசேசே. இவர், அதிபராக இருக்கும் காலத்தில் ஏற்பட்ட ஒரு விமான விபத்தில் உயிரிழந்துவிட்டார். அவரின் நினைவாகவே, ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படுகிறது.'ரமோன் மகசேசே விருது' ஃபவுண்டேஷனின் தலைவர் கார்மென்சிட்டா அபெல்லா, இந்த விருது பற்றிக் கூறுகையில், "சிறிய அளவிலேயான சாத்தியக்கூறுகள், கடும் அச்சுறுத்தல்கள், வலுவான எதிர்ப்பு ஆகியவற்றைக் கண்டு துவளாமல், கடைசிவரை செயலில் உறுதியாக நின்றவர்கள்தான் இந்த விருதுப் பட்டியலில்  இடம்பெற்றுள்ளவர்கள். அவர்களது அணுகுமுறைகள் அனைத்தும் மனித கௌரவத்துக்கான மரியாதை மற்றும் கூட்டுமுயற்சியின் ஆற்றல் மீதான நம்பிக்கை ஆகியவற்றில் ஆழம் கொண்டுள்ளன" என்று கூறினார். இந்த வருடம் ஆகஸ்ட் 31-ம் தேதி இந்த விருது வழங்கும் விழா, பிலிப்பைன்ஸில் நடைபெற உள்ளது.

இந்த விழாவில், ஈழத்தைச் சேர்ந்த தமிழாசிரியர் கெத்சீ சண்முகம் விருதுபெற உள்ளார். இலங்கையில் நடந்த யுத்தங்களால் பாதிக்கப்பட்ட விதவைகள், அனாதைகள் மற்றும் குழந்தைகள் ஆகியோருக்குப் பல்வேறு உதவிகளைச் செய்தவர். மேலும், குண்டு வெடிப்புகளினாலும் ராணுவத்தின் அச்சுறுத்தல்களினாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உளவியல்ரீதியாக உதவிகள்செய்து அவர்களை திடப்படுத்தியவர் ஆவார்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close