Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரு நாள் மழைக்கே சேதமடைந்த சென்னை மாநகரம்..!

    rain

டுத்த மூன்று நாள்களுக்கு மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், சென்னை மற்றும் திருவள்ளூரில், செவ்வாய்க்கிழமை இரவு முதல் சாரல் மழை  பெய்ய ஆரம்பித்துள்ளது. சாரல் என்றாலும் சில மணித்துளிகள் வரை மழை பெய்ததால், சாலையில் வெள்ளம் பெருகி ஓடியது. தென்மேற்குப் பருவமழை எதிர்பார்த்த அளவு தமிழகத்தில் பெய்யாததால், விவசாயத்துக்குப் போதிய தண்ணீர் இல்லாமல் தமிழகம் எங்கும் பூமி வறண்டது.

பருவமழை உரிய காலத்தில் பெய்தாலும் அதை சேமித்துவைக்கவோ பாதுகாப்பான முறையில் பயன்படுத்திக்கொள்ளவோ அடிப்படைக் கட்டமைப்புகள் இங்கே சிறப்பாக இல்லை. நேற்று முன்தினம் (செவ்வாய்) இரவு முழுவதும் சென்னை மயிலாப்பூர், கோடம்பாக்கம், வடபழனி, கே.கே.நகர், ராயபுரம், திருவொற்றியூர், தண்டையார்பேட்டை போன்ற இடங்களில் சிறு தூறலாக விழுந்த மழை, அதிகாலையில் சற்று வேகம் பிடித்தது.

ஆனாலும் தொடர்ச்சியாக சில மணிநேரம்கூட மழையின் வேகம் இருக்கவில்லை. சென்னைக்கு அருகிலுள்ள திருவள்ளூர் மாவட்டத்தின்  செங்குன்றம், மணவாளன்நகர், திரூர், வேப்பம்பட்டு, கும்மிடிப்பூண்டி, சோழவரம் போன்ற பகுதிகளில், சாரலுக்கே வெள்ளம் தேங்கி நின்றது. வீட்டை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் தவித்து நின்றனர். பெரும்பாலான சாலைகளில் மழைநீர் குட்டைபோல தேங்கி நின்றது. 'மழைநீர் வடிகால் திட்டம்'  பற்றி கொஞ்சமும் மக்களிடம் விழிப்பு உணர்வு இல்லை என்பதோடு அதைச் சுட்டிக்காட்டும் நிலையிலும் அரசு இல்லை என்பதைத்தான் இந்தச் சாரல் மழை கோடிட்டுக்காட்டியது.

சூறைக்காற்று, இடி, மின்னலுடன் கனத்த மழைப்பொழிவு இருந்திருந்தால், சென்னையின் நிலை என்னவாகி இருக்குமோ? காற்று மண்டல கீழடுக்குப் பகுதியில், காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், அடுத்த மூன்று நாள்களுக்குத் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். ஒருநாளுக்கே சென்னை அலங்கோலமாகிக்கிடக்கிறது. உடைப்பெடுத்த சாக்கடைக் கழிவு நீரோடு மழைநீரும் கலந்து, சென்னையையும் திருவள்ளூர் மாவட்டத்தையும் நாறடித்துக்கொண்டிருக்கிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close