Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் முளைப்பாரி ஊர்வலத்துக்கு வரவேற்பு அளித்த முஸ்லிம்கள்!

ராமநாதபுரத்தில், இந்துக்கள்-முஸ்லிம்கள் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் மாரியம்மன் முளைப்பாரி ஊர்வலத்துக்கு முஸ்லிம் வாலிபர் சங்கத்தினர் வரவேற்பு அளித்து அசத்தினர்.

முளைப்பாரிக்கு முஸ்லீம் சங்கத்தினர் வரவேற்பு
 

ஆடி மாதங்களில் அம்மன் கோயில்களில் விசேஷ விழாக்கள் நடப்பது வழக்கம். இவற்றில், தென் மாவட்டங்களில் நடைபெறும் முளைப்பாரி திருவிழாக்கள் முக்கிய இடம்பிடிக்கின்றன. இதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முளைப்பாரி திருவிழாக்கள் நடந்துவருகின்றன. ராமநாதபுரம் புளிக்காரத் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு முளைப்பாரித் திருவிழா நடைபெற்றது. ஒரு வார காலம் நடந்த இந்தத் திருவிழாவின் இறுதி நாளான நேற்று, பெண்கள் மாரியம்மன் கோயில் முன்பாக பொங்கல்வைத்து மாவிளக்கு எடுத்து வழிபட்டனர். இதைத் தொடர்ந்து, மாரியம்மனுக்காக நேர்ந்து வளர்க்கப்பட்ட முளைப்பாரிகளை நீர்நிலையில் கரைப்பதற்காக அம்மன் கரகத்துடன் ஊர்வலமாகச் சென்றனர்.

நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்ற இந்த முளைப்பாரி ஊர்வலம், சின்னக்கடைத்தெரு வழியாக வந்தது. அங்குள்ள முஸ்லிம் பள்ளிவாசல் அருகே முஸ்லிம் இளைஞர் சங்கத்தின் சார்பில் முளைப்பாரி ஊர்வலத்துக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அம்மன் கரகம் எடுத்து வந்தவருக்கு முஸ்லிம் சங்க நிர்வாகி முகமது நிஷார், பொன்னாடை போர்த்தி வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் சைரோஸ், நைனார் உள்ளிட்ட ஜமாத் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

 அவ்வப்போது, மதப் பிரச்னைகளைச் சந்தித்துவரும் ராமநாதபுரத்தில், அவற்றுக்கு மாற்றாக மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையிலும் மக்கள் ஒற்றுமை, இரு தரப்பினைச் சேர்ந்தவர்களிடையே சகோதரத்துவத்தை எடுத்துரைக்கும் வகையிலும் ஆண்டாண்டு காலமாக இந்த வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது. 
  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close