Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முதல்வர் பழனிசாமி, 4 அமைச்சர்களுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

சசிகலாவிடம் ஆலோசனை கேட்ட விவகாரத்தில் பதில் அளிக்க, முதல்வர் பழனிசாமி மற்றும் நான்கு அமைச்சர்களுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க., சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் என இரண்டு அணிகளாகப் பிரிந்தன. சசிகலா அணியைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குச் சென்ற பின்னர், அவரை அமைச்சர்கள் சந்தித்துப் பேசினர். இதற்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியது.

இதனிடையே, சிறையில் உள்ள சசிகலாவிடம் முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், காமராஜ், செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் ஆலோசனை கேட்பது ரகசியக் காப்பு பிரமாணத்துக்கு எதிரானது என்றும், சிறையில் உள்ள சசிகலாவிடம் ஆலோசனை கேட்க இவர்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் தாமரைக்கனியின் மகன் ஆணழகன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார். மேலும், முதல்வர், அமைச்சர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு, உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் நான்கு பேரும் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணையைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close