Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காணாமல் போன மாணவிகள் தண்டவாளத்தில் சடலமாக கிடந்தனர்! தலைமை ஆசிரியர் மீது பகீர் புகார்

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே காணாமல் போன  10-ம் வகுப்பு மாணவிகள் இருவர், தட்டாரப்பட்டி என்னும் இடத்தின் அருகே ரயில்வே தண்டவாளத்தில் சடலமாகக் கிடந்தனர். இவர்கள் இருவரும்  தற்கொலை செய்துகொண்டார்களா என போலீஸார் விசாரணை செய்துவருகிறார்கள்.

சரளப்பட்டியைச் சேர்ந்த ரதிதேவி மற்றும் வைரம்பட்டியைச் சேர்ந்த செல்வி ஆகிய இருவரும்  வையம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று பள்ளிக்கு சென்றவர்கள், மாலை வீடு திரும்பவில்லை. இரண்டு பேரையும் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தேடி வந்தனர்.  இந்நிலையில், இருவரும் மணப்பாறையை அடுத்த  தட்டாரப்பட்டி என்ற இடத்தில் ரயில்வே தண்டவாளத்தில் சடலமாகக் கிடந்தனர்.

மாணவிகளின் மரண வாக்குமூலக் கடிதம் ஒன்றை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். தற்கொலைக்கான காரணமும் காரணமான நபர்கள் குறித்தும் அதில் இருப்பதாகக் கூறப்படுகிறது. தற்கொலைக்கு என்ன காரணம் என்று இதுவரை தெரிவிக்கப்படவில்லை. ரயில்வே எஸ்.பி. ஆனிவிஜயா மற்றும் டி.எஸ்.பி. பன்னீர்செல்வம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து நேரில் வந்து விசாரணை செய்தனர். மேலும், ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியரும் விசாரணை நடத்திவருகிறார்.

இதனிடையே, பள்ளி தலைமை ஆசிரியர் மீது மாணவிகளின் பெற்றோர் பகீர் புகாரை அளித்துள்ளனர். மாணவிகள் எழுதி வைத்த கடிதங்களை தலைமையாசிரியர் எடுத்துச்சென்றதாகவும், இந்த கடிதத்தை அவரிடம் இருந்து கைப்பற்றி காவல்துறையினரிடம் ஒப்படைத்ததாகவும் பெற்றோர்கள் கூறியுள்ளனர். மேலும், தங்கள் பிள்ளைகளின் மரணத்தில் மர்ம இருப்பதாகவும், தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close