Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குடியிருப்புப் பகுதியில் புகுந்து அட்டகாசம் செய்யும் சிறுத்தை! -ஆட்டை அடித்துக் கொன்றதால் மக்கள் அச்சம்

நெல்லை மாவட்டம் கடையம் பகுதியில், 50 நாட்களாக தலைகாட்டாமல் இருந்த சிறுத்தை, மீண்டும் குடியிருப்புப் பகுதியில் புகுந்து ஆட்டை அடித்துக் கொன்றதால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

cheeta

நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள பெத்தான்பிள்ளை குடியிருப்பு கிராமம் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ளது. இந்த கிராமத்தில் அடிக்கடி சிறுத்தை நுடைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. அத்துடன் விவசாயிகள் வீடுகளில் வளர்க்கும் ஆடு, மாடுகளையும் அடித்து தூக்கிச் சென்று விடுகிறது. இதுவரையிலும் இந்த கிராமத்தில் இருந்து 5 சிறுத்தைகளை வனத்துறையினர் கூண்டு வைத்துப் பிடித்துக் காட்டுக்குள் கொண்டு சென்று விட்டுள்ளனர். பொதுமக்களும் வனத்துறையினரும் தொடர்ந்து மேற்கொண்ட முயற்சியால் சிலவற்றை காட்டுக்குள் விரட்டி விட்டனர். 

 

ஊருக்குள் அடிக்கடி நுழையும் சிறுத்தையால் அவதிப்பட்ட பெத்தான்பிள்ளை குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கடந்த 50 நாட்களாக நிம்மதியாக இருந்தனர். அந்தப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் இல்லாததால் நிம்மதியாக நடமாடி வந்தனர். இந்த நிலையில், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் மீண்டும் சிறுத்தை ஒன்று ஊருக்குள் நுழைந்து தொந்தரவு கொடுத்து வருகிறது. முத்து என்பவர் தனது வீட்டின் முன்பாக நின்று செல்போனில் பேசிக் கொண்டு இருந்தபோது திடீரென அப்பகுதிக்கு வந்த சிறுத்தையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அதிகாரிகள் ஆய்வு

அவர் அங்கிருந்து ஓடி தப்பிச்செல்ல முயன்றபோது, அங்கு நின்றிருந்த நாயைத் துரத்திச்சென்ற சிறுத்தை, அதை அடித்துத் தூக்கிச் சென்றது. இதனால், கிராமத்து மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.  இந்த நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் வீட்டில் அடைத்துவைக்கப்பட்டிருந்த ஆடுகள் இருந்த பகுதிக்குள் நுழைந்தது. ஆடுகளின் சத்தம் கேட்டு முருகன் அங்கு சென்று பார்த்த போது, ஒரு ஆட்டை அடித்துக் கவ்விச்செல்ல முயன்றபோது, அவர் சத்தமிட்டதால் ஆட்டைப் போட்டுவிட்டு சிறுத்தை தப்பி ஓடிவிட்டது. 

இதனால், மக்கள் அச்சம் அடைந்தனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, சமபவ இடத்துக்குச் சென்ற வனவர் மோகன் மற்றும் வனத்துறையினர், பொதுமக்களிடம் பேச்சுவாரத்தை நடத்தினர். பாதிக்கப்பட்ட முருகனின் வீட்டுக்குச் சென்று பார்வையிட்ட அவர்கள், மிரட்டும் சிறுத்தையைக் கூண்டு வைத்துப் பிடிக்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனர். 

சிறுத்தைகளின் அட்டகாசத்தால், விவசாயிகள் தங்களது விளை நிலங்களுக்குச் செல்ல முடியாத நிலைமை இருப்பதாகப் பொதுமக்கள் குமுறலுடன் தெரிவித்தனர்.  இரவு நேரங்களில் ஊரைச் சுற்றிலும் தீப்பந்தங்களை ஏற்றவேண்டிய நிலைமை ஏற்பட்டிருப்பதாக கிராமத்தினர் வேதனை தெரிவித்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close