Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நாய்க்கு திருமணம் செய்துவைத்த மக்கள்... கொட்டி தீர்த்த மழை!

மதுரை வாடிப்பட்டி தெத்தூர் பகுதி நாராயணபுரம் கிராமத்தில் மழை வரம் வேண்டி ஆண் நாய்க்கும், பெண் நாய்க்கும் திருமணம் நடத்திவைக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் நல்ல மழை பொழிந்துவருதால் வேண்டுதல் நிறைவேறியதாக அப்பகுதிப் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

திருமணம்

சில நாள்களுக்கு முன் நாராயணபுரத்தில் உள்ள வல்லவன் கோயில் முன்பாக ஆண் நாய்க்கும் , பெண் நாய்க்கும் திருமணம் செய்துவைக்கப்பட்டது . மனிதர்களுக்கு இடையே நடத்தப்படும் நார்மல் கல்யாணம் போலவே இந்த நாய்களுக்குப் பட்டுச் சேலை, பட்டு வேஷ்டி அணிய வைத்து தாலிகட்டி திருமணம் நடத்திவைக்கப்பட்டது . பின் அனைவருக்கும் விருந்து வழங்கப்பட்டு, மொய் சடங்கும் செய்தனர். இந்தத் திருமணத்திற்கு பக்கத்துக் கிராம மக்களை வரவேற்க அழைப்பிதழ்களும் அடித்து அதனை வழங்கப்பட்டு வரவேற்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது . இந்த விநோத கல்யாண நிகழ்ச்சி கடந்த 1993ல் வறட்சி அதிகமாக இருந்தபோது இதே போன்று நாய்களுக்குத் திருமணம் நடத்திவைக்கப்பட்டிருக்கிறது .

மழை

தற்போது 3 நாள்களுக்கு முன் நடைபெற்ற இந்தத் திருமணத்தால் தற்போது மதுரையில் கனமழை பொழிந்துவருவதாவும் அதனால் ஏரி, குளம் , ஆறுகளில் தண்ணீர் சேகரம் ஆகிவருவதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர் .

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close