Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கேஸ் மானியத்தைத் தொடர்ந்து மண்ணெண்ணெயிலும் கைவைக்கிறது மத்திய அரசு!

கேஸ் மானியத்தை ரத்து செய்வதாக செய்தி வெளியானதை அடுத்து தற்போது மண்ணெண்ணெய் மானியத்திலும் கைவைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மண்ணெண்ணெய்

மத்திய அரசு தொடர்ந்து பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சில நாள்களுக்கு முன் கேஸ் மானியத்தை ரத்து செய்வது குறித்து செய்தி வெளியானது. பின்னர் பெட்ரோலியத் துறை அமைச்சர் அப்படி ஒரு எண்ணம் இல்லை என்று பல்டி அடித்தார். ஆனால் கேஸ் நிறுவனங்களை மாதம் 4 ரூபாய் வீதம் விலையை உயர்த்திக்கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. 

இதனையடுத்து தற்போது மண்ணெண்ணெய் மானியத்தையும் ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. முழுமையாக மானியத்தை ரத்து செய்யும் வரை அரசு மண்ணெண்ணெய் நிறுவனங்களை லிட்டருக்கு 25 பைசா வீதம் 15 நாள்களுக்கு ஒருமுறை விலை ஏற்றுமாறு அறிவுறுத்தியிருக்கிறது. 

கேஸ் பயன்பாடு அதிகரித்திருப்பதால் மண்ணெண்ணெய் பயன்பாடு குறைந்துவருவதையடுத்து இந்த நடவடிக்கையை எடுப்பதாகக் கூறப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close