Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எடப்பாடி பழனிசாமி நாடகமாடுகிறாரோ? ஓ.பன்னீர்செல்வம் சந்தேகம்

சசிகலா குடும்பத்தை அதிமுகவிலிருந்து ஒதுக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி நாடகம் ஆடுகிறாரோ என்று சந்தேகம் ஏற்படுகிறது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

அதிமுகவில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்த டி.டி.வி.தினகரன், டெல்லி சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் கட்சிப்பணியை தொடங்கப்போவதாக அறிவித்தது எடப்பாடி பழனிசாமி அணியை அதிரவைத்தது. இந்தநிலையில், ஆகஸ்ட் 5-ம் தேதி ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு செல்ல இருப்பதாக கூறி மேலும் பரபரப்பை ஏற்படுத்தினார் தினகரன். இதைத் தொடர்ந்து முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை அழைத்து அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், கட்சியையும் ஆட்சியையும் முதல்வர் பழனிசாமிதான் வழிநடத்துவார் என்று அதிரடியாக அறிவித்தார். இந்த பரபரப்புக்கு இடையே பன்னீர்செல்வம் அணியை இணைக்கும் பேச்சுவார்த்தையில் பழனிசாமி அணியினர் ஈடுபட்டு வருகின்றனர். பன்னீர்செல்வத்துக்கு பொதுச் செயலாளர் பதவி கொடுக்க பழனிசாமி அணியினர் முன்வந்துள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், கோவை வந்த ஓ.பன்னீர்செல்வத்திடம் இணைப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர், எடப்பாடி- டி.டி.வி.தினகரன் இடையேயான மோதலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். சசிகலா குடும்பத்தை அதிமுகவிலிருந்து ஒதுக்கி விட்டதாக எடப்பாடி நாடகம் ஆடுகிறாரோ என்று சந்தேகம் ஏற்படுகிறது. சசிகலா குடும்பத்தை ஒதுக்கி விட்டதாக கூறுவதின் உண்மைத்தன்மை குறித்து எடப்பாடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close