Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உயிரை பலிவாங்கிய அரசுத் தொகுப்பு வீடு! கொந்தளிக்கும் இருளர்கள்

காஞ்சிபுரம் மாவட்டம், அச்சிறுபாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட கன்னிகோயில் பகுதியில், இருளர் குடியிருப்பு உள்ளது. இங்குள்ள 22 தொகுப்பு வீடுகளும் வாழ்வதற்கே தகுதியற்ற நிலையில் உள்ளன.

iyammal

ஆகவே, எங்களுக்கு புதிய குடியிருப்பு ஒன்றை கட்டித் தர வேண்டும் என அந்தக் குடியிருப்பைச் சேர்ந்தவர்கள், பல வருடங்களாக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், அரசுத் தரப்பில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், மதுராந்தகம் பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது. மழை காரணமாக, இன்று காலை 4 மணியளவில் கான்கிரீட் மேற்கூரை  இடிந்து விழுந்ததில், ஆறுமுகம் என்பவரின் மனைவி அய்யம்மாள் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து, அந்த இடத்தை சப்-கலெக்டர் கிள்ளிவளவன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வுசெய்தனர். 'இருளர் மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கேற்ற புதிய இடம் ஒன்றை அரசாங்கம் கொடுக்க வேண்டும். மேலும், அவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித் தர வேண்டும்' என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அய்யம்மாளின் உடல், பிரேதப் பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மலைவாழ் சங்கத்தினர், வருவாய் கோட்டாட்சியரிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close