Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கேரளா: தனியார் பள்ளி ஆசிரியைகளுக்கு மாதவிலக்கு நாளில் ஒருநாள் விடுமுறை!

மாத விலக்கு

கல்வி பெற்றவர்கள் விழுக்காட்டில், மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக விளங்குவது, கேரளா. கேரளாவின் தனியார் பள்ளி ஆசிரியர்கள் சங்கம்  (All Kerala Self-Financing Schools Federation), ஆசிரியர்களின் உரிமைகள்குறித்த கோரிக்கைகளை முன்னெடுத்துவருகிறது. அவற்றில் ஒன்றுதான், பெண் ஆசிரியர்களுக்கு மாதவிலக்கு நாள்களில் விடுமுறை. சங்கத்தின் தலைவர் ராமதாஸ் விடுத்துள்ள அறிவிப்பில், 'கேரளாவில் உள்ள தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியைகளுக்கு, மாதவிலக்கின் முதல் நாள், சம்பளத்துடன்கூடிய விடுமுறை அளிக்கப்படும். இதன்மூலம் 4,000 தனியார் பள்ளிகளில் பணிபுரியும் சுமார் 50 ஆயிரம் ஆசிரியைகள் பயனடைவார்கள். ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதியிலிருந்து இது அமலுக்கு வருகிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 'தனியார் பள்ளிகளில் திருநங்கைகள் வேலைக்கு அமர்த்தப்படுவர்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் திருநங்கைகள், கடும்போராட்டங்களைச் சந்தித்தே வேலைக்கு வரவேண்டியிருக்கிறது. அப்போது, அவர்களின் உடல் சார்ந்த பிரச்னைகளைப் பணியிடங்களில் கவனத்தில் கொள்வதில்லை. இதுபோன்ற சூழலில், கேரள தனியார் பள்ளி ஆசிரியர் சங்கத்தின் அறிவிப்பு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close