Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரயில் பயணத்தில் இனி படம் பார்க்கலாம்! அறிமுகப்படுத்துகிறது ரயில்வே

ரயில் பயணத்தின்போது திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளைப் மக்கள் பார்க்கும்படியாக புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்படும் என மத்திய ரயில்வே துறை மக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

இந்திய அளவில் நீண்ட தூரப் பயணங்களுக்குச் செல்லும் மக்கள் பெரும்பாலும் ரயிலையே தேர்வு செய்கின்றனர். ரயிலில் பயணிப்பதை பெரும்பாலான மக்கள் ரசிக்கவும் செய்கின்றனர். ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப் வைத்திருப்பவர்கள் ரயிலில் பயணிக்கும்போது படம் பார்ப்பதும், பாடல் கேட்பதும் வழக்கம். இதுபோன்ற வசதிகள் இல்லாத பயணிகள் பெரும்பாலும் ரயிலில் உறங்கிக்கொண்டே பயணிக்கின்றனர். இரண்டு நாள்கள் வரை ரயிலில் இதுபோல பயணிப்பது போர் அடிக்கத்தான் செய்யும். அந்த சமயங்களில் தகவல் தொடர்பின்றிப் போனால் நாட்டில் என்ன நடக்கிறது என்பது கூடத் தெரியாது. எனவே, ரயில் பயணங்களின்போது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் வழங்குவதற்கான பரிந்துரைகள் கோரப்பட்டுள்ளதாக ரயில்வே இணை அமைச்சர் ராஜென்கோஹெய்ன் தெரிவித்துள்ளார். 

இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், ரயிலில் பொழுதுபோக்கு வசதியை வேண்டுபவர்கள் ஏற்கெனவே பதிவேற்றம் செய்யப்பட்ட பாடல்கள் மற்றும் வீடியோக்களை தங்களிடம் உள்ள மொபைல் போன் மற்றும் லேப்டாப் போன்றவற்றின் மூலம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மக்களவையில் எழுத்து வடிவில் பதில் அளித்துள்ளார். 

சதாப்தி, ராஜ்தானி உள்ளிட்ட 1300 ரயில்களில் இந்த வசதியை வழங்குவதற்கான பரிந்துரைகள் ஜூலை 6-ம் தேதி கோரப்பட்டுள்ளது என்றும் கூறினார். இந்த வசதிக்காக பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் வாய்ப்புள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close