Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாபநாசம் அணையைத் திறக்க வேண்டும்! - ஆட்சியருக்கு அனைத்துக் கட்சியினர் கோரிக்கை

பாபநாசம் அணை திறக்க கோரிக்கை

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி பகுதியில் பயிரிடப்பட்டுள்ள வாழை உள்ளிட்ட பயிர்களைக் காக்கும் வகையில், பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என அனைத்துக் கட்சியினர் ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்தனர்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அணையின் கொள்ளளவு 143 அடியாக உள்ள நிலையில், தற்போது 52 அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. 156 அடி கொண்ட சேர்வலாறு அணையில் 16 அடி தண்ணீரும், 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணையில் 33 அடி நீரும் இருக்கிறது. இந்த அணைகளிலிருந்து தண்ணீர் பாயும் தாமிரபரணி ஆற்றை நம்பி நெல்லை மாவட்டத்தில் 40,000 ஏக்கரும், துத்துக்குடி மாவட்டத்தில் 46,000 ஏக்கரும் பாசன வசதி பெறுகின்றன. வருடந்தோறும் ஜூன் 1-ம் தேதி கார் சாகுபடிக்கு தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு பருவ மழை சரிவரப் பெய்யாததால் இதுவரையிலும் தண்ணீர் திறக்கப்படவில்லை. பருவ மழையை நம்பி பயிரிட்டுள்ள பயிர்கள் அனைத்தும் கருகும் நிலையை எட்டியிருப்பதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். இதனால், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி தாலுக்காவுக்கு உட்பட்ட வடக்கு மற்றும் தெற்கு கோடை மேலழகியன், நதியுண்ணி, கன்னடியன் கால்வாய்களில் தண்ணீர் திறந்தால் மட்டுமே விவசாயத்தைப் பாதுகாக்க முடியும் என்கிற நிலைமை உள்ளது.

வழக்கமாக குறிப்பிட்ட காலத்தில் தண்ணீர் திறப்பதால் விவசாயிகள் பயன் அடைந்து வந்தனர். இந்த ஆண்டில் இனியாவது தண்ணீர் திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அம்பாசமுத்திரத்தில் கடந்த 1-ம் தேதி அனைத்துக் கட்சியினர் சார்பாக உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. ஆனாலும், இதுவரையிலும் தண்ணீர் திறக்கப்படவில்லை. அதனால் அணையை உடனடியாகத் திறக்கக்கோரி தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனுக் கொடுத்தனர். பின்னர் பேசிய நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும் முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பன், ’’கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்படாததால் 18,000 ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்யப்பட்டிருக்கும் வாழை கருகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. தண்ணீர் இல்லாததால், விவசாயிகள் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டுவருவதால் அதிக செலவு ஏற்படுகிறது. கடந்த காலங்களில் 30 அடி தண்ணீர் இருந்தபோதுகூட அணை திறக்கப்பட்டது. ஆனால், தற்போது பாபநாசம் அணையில் 52 அடியும் மணிமுத்தாறு அணையில் 33 அடியும் தண்ணீர் இருப்பதால் உடனே அணையை திறக்க வேண்டும். இதனை மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தினோம். அவரும் எங்களது கோரிக்கையைக் கவனமாகக் கேட்டுக்கொண்டதுடன், வடக்கு மற்றும் தெற்கு கோடைமேலழகியன், கன்னடியன், நதியுண்ணி கால்வாய்களில் சுழற்சி முறையில் தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார்’’ எனக் கூறினார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close