Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தகிக்கும் தண்ணீர் தொட்டி ஊழல்! - கதிகலக்கிய கால்நடைத் துறை

கொல்லங்குடி மற்றும் அதைச்சுற்றியுள்ள ஆறு கிராமங்களில் உள்ள ஆடு மாடுகள் தண்ணிர் குடிப்பதற்காக கால்நடைகள் பராமரிப்புதுறையின் மூலம் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு கொடுத்திருக்கிறார் ஆடு வளர்ப்போர் சங்க பொறுப்பாளர் காளிமுத்து.

kollangudi

தற்போது நிலவி வரும் வறட்சினால் ஆடு மாடுகள் குடிக்கத் தண்ணீரின்றி சிரமப்படுகிறது. இதற்காக கால்நடைகள் பராமரிப்புத் துறையின் மூலம் ஆழ்துளைக் கிணறு அமைத்து மின் இணைப்புடன் கூடிய தொட்டி கட்ட ரூபாய் 83 ஆயிரம் நிதி ஒதுக்கியதில், தண்ணீர் தொட்டி மட்டும் ஆடு மாடுகளுக்கு உதவாத வகையில் பள்ளமான பகுதியில் கட்டியிருக்கிறார்கள். இந்தத் தொட்டியில் ஆடுமாடுகள் தண்ணீர் குடிக்க முடியாது. அப்படியே குடிக்கப் போனால் தொட்டிக்குள் விழுந்துவிடும் நிலைதான் இருக்கிறது. தொட்டி கட்டிய ஒப்பந்ததாரர்கள் எங்களுக்குத் தெரியாமலேயே கட்டியிருக்கிறார்கள். எங்கள் பகுதியில் குறைந்தது 5 ஆயிரம் ஆடுகள் இருக்கிறது. மாடுகள் தனியான எண்ணிக்கையில் இருக்கிறது. இப்படி இருக்கையில், அரசின் திட்டம் பயன்படாமல் இருப்பதும் எங்கள் குறைகள் நிவர்த்தி செய்யப்படாமல் இருப்பதும் வேதனையாக இருக்கிறது. ஆகையால், சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்திருக்கிறார். 

ஆனால், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரியிடம் பேசும்போது “கால்நடைத் துறையின் மூலம் ஆடுமாடுகள் தண்ணீரின்றி சிரமப்படுவதைப் போக்க தண்ணீர்த் தொட்டி கட்டுவதற்காக 83 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மின் இணைப்பு ஆழ்குழாய் அமைப்பது எல்லாம் பஞ்சாயத்துதான் பார்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் இருக்கும் பகுதியையொட்டிதான் இந்த தொட்டியே அமைக்க வேண்டும். தொட்டி கட்டியதில் முறைகேடு நடந்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close