Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'என் கம்பெனிக்கு நீதான் எம்.டி'! - 15ஐ ஏமாற்றிய 35

''என் கம்பெனிக்கு உன்னை முதலாளியாக்குகிறேன்'' என்று கூறி 15 வயது சிறுமியைத் திருமணம் செய்த 35 வயதுடைய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே நடந்துள்ளது.

ஜெயங்கொண்டம் அருகே அமிர்தராயன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (35). திருச்சி அருகேயுள்ள அரியமங்களத்தைச் சேர்ந்தவர் கல்பனா. இருவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இருவரும் திருப்பூர் பணியன் கம்பெனியில் வேலை செய்துள்ளனர். அங்கு வேலை சரியாக இல்லாததால் கல்பனா மற்றும் குழந்தைகளை அரியமங்களத்தில் உள்ள தனது தாயாரிடம் விட்டுவிட்டு ராஜா திருப்பூரில் வேலை செய்துகொண்டிருந்தார். கொஞ்ச நாள் கழித்து ராஜா அவரது வீட்டுக்கு வந்தபோது, பாகல்மேடு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது, "தான் திருப்பூரில் சொந்தமாக பனியன் கம்பெனி வைத்திருக்கிறேன். எனக்கு இன்னும் திருமணமாகவில்லை. நீ என்னைத் திருமணம் செய்துகொண்டால் உன்னை என் கம்பெனிக்கு முதலாளியா ஆக்குறேன்" என்று  ஆசை வார்த்தை கூறியிருக்கிறார்.

                                

ராஜாவின் ஆசை வார்த்தைகளை நம்பிய சிறுமி திருமணத்துக்கு சம்மதித்துள்ளார். இருவரும் 5 மாதத்துக்கு முன்பு திருமணம் செய்துள்ளனர். மேலும் சிறுமியை பாகல்மேடு கிராமத்தில் உள்ள அவரது தந்தையின் வீட்டில் விட்டுவிட்டு திருப்பூர் சென்றுவிட்டார் ராஜா. அவ்வப்போது சிறுமியைப் பார்த்துவிட்டு சென்றுள்ளார். இச்சம்பவம் ராஜாவின் மனைவி கல்பனாவுக்குத் தெரியவந்ததையடுத்து இது குறித்து ஜெயங்கொண்டம் மகளிர் காவல் நிலையத்தில் ராஜாவின் மீது புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸார், மைனர் பெண்ணை மீட்டு ராஜாவை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close