Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மீண்டும் சம்மன் அனுப்பிய வருமானவரித்துறை: அமைச்சர் விஜயபாஸ்ருக்கு நெருக்கடி!

அமைச்சர் விஜயபாஸ்கருக்கு, வருமானவரித்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. 

விஜயபாஸ்கர்

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு ஆளும்கட்சியினர் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக வந்த புகாரைத் தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கரின் சென்னை வீடு, புதுக்கோட்டையில் உள்ள வீடு மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் கடந்த ஏப்ரல் 7-ம் தேதி அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். 

மேலும் விஜயபாஸ்கரிடம் பல தடவை வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர். அண்மையில் நடத்தப்பட்ட விசாரணையில் விஜயபாஸ்கரிடம் கிடுக்கிப்பிடி கேள்விகளை வருமான வரித்துறையினர் கேட்டனர். இதையடுத்து விஜயபாஸ்கர் குடும்பத்துக்குச் சொந்தமான 100 ஏக்கர் நிலங்கள், குவாரிகள் உள்ளிட்ட சொத்துகள் நேற்று முன்தினம் முடக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டப் பதிவாளர் சசிகலா மற்றும் விராலிமலை சார்பதிவாளர் உள்ளிட்டோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில், விஜயபாஸ்கருக்கு வருமானவரித்துறையினர் இன்று மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர். இதனால், மாலை அவர் மீண்டும் ஆஜராவார் என்று கூறப்படுகிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close