Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாதிக்கப்பட்ட இருளர்களுக்கு புதிய தொகுப்பு வீடுகள்! மதுராந்தகம் சார்ஆட்சியர் உறுதி!

irular

காஞ்சிபுரம் மாவட்டம், அச்சிறுபாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட கன்னிகோயில் பகுதியில், மழை காரணமாக, இன்று காலை 4 மணியளவில் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்ததில், அய்யம்மாள் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து, அந்த இடத்தை மதுராந்தகம் சார் ஆட்சியர் கிள்ளிவளவன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வுசெய்தனர். அப்போது ‘பல வருடங்களாகவே நாங்கள் வைத்த கோரிக்கையை அரசு நிராகரித்தது. எங்கள் மனுமீது அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், நாங்கள் ஒரு உயிரை இழக்க நேர்ந்திருக்காது. எங்களுக்கான அடிப்படை வசதிகளை செய்துகொடுத்தால் மட்டுமே அய்யம்மாளின் பிரேதத்தை வாங்குவோம்’ என இருளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து தமிழ்நாடு மலைவாழ் சங்க மாநில பொதுச்செயலாளர்  சரவணன் தலைமையில்  சார் ஆட்சியர் கிள்ளிவளவனிடம் மனு கொடுத்தனர்.

irular

அதில் “கன்னிகோயில் பகுதியில் வசிக்கும் 26 இருளர் குடும்பங்களுக்கும் மாற்று இடத்தில் பட்டாவுடன் கூடிய தொகுப்பு வீடு கட்டிதர வேண்டும். மழைக்காலம் என்பதால் பழைய வீடுகளில் யாரும் வசிக்க முடியாத நிலை உள்ளது. அதுவரை எங்களுக்கு நிவாரணத்தொகையுடன் மாற்று இடம் கொடுக்க வேண்டும். இறந்துபோன அய்யம்மாளின் குடும்பத்துக்கு 5 லட்சம் நிவாரணத்தொகை வழங்க வேண்டும்.” என குறிப்பிட்டிருந்தனர். இதைத் தொடர்ந்து சார்-ஆட்சியர் கிள்ளிவளவன், இருளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக உறுதி அளித்துள்ளார். இதனால் அவர்களை தங்க வைப்பதற்கு மாற்று இடத்தை அதிகாரிகள் ஆய்வுசெய்து வருகின்றனர். அதைத் தொடர்ந்து அய்யம்மாளின் பிரேதத்தை அவரது உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close