Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’என் வீடியோவைப் பரப்புகிறவர்கள் மனநோயாளிகள்!’ - சீறும் சரிதா நாயர்

சரிதா நாயர்

'என்னைத் தவறாகச்  சித்திரித்து சமூக வலைதளங்களில் வீடியோக்களை பரப்புகிறவர்கள் மனநோயாளிகள்' என்று நடிகை சரிதாநாயர் கோவையில் தெரிவித்துள்ளார்.

கோவை வடவள்ளியில் காற்றாலை அமைத்துத் தருவதாகக் கூறி 26 லட்சம் மோசடி செய்ததாக கேரள நடிகை சரிதா நாயர்மீது 2009-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கோவை 6-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இன்று சரிதா நாயர் மற்றும் ரவி ஆகியோர் ஆஜராகினர். வழக்கு விசாரணையை வரும் செப்டம்பர் 8-ம் தேதிக்கு நீதிபதி ராஜவேல் ஓத்திவைத்தார். 

பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த சரிதா நாயர், "சோலார் பேனல் வழக்கில் எனக்கு கேரளாவில் அச்சுறுத்தல் இருக்கிறது. அது வழக்கமான ஒன்றுதான். ஆனால், தமிழகத்தில் எவ்வித அச்சுறுத்தலும் எனக்கு இல்லை. கேரளாவில் நடைபெறும் சோலார் பேனல் வழக்கில் சி.பி.சி.ஐ.டி விசாரணை கமிஷன் இரண்டு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய இருக்கிறது. அவர்கள் உண்மையாக விசாரணை நடத்தினால் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும். இந்த வழக்கில் தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கத்துக்கு உள்ள தொடர்பு குறித்தும் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகளிடம் கொடுத்த புகாரில் தெரிவித்துள்ளேன். கேரளாவில் நடிகை  கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைத் நிகழ்த்தியது யாராக இருந்தாலும் அது மிகவும் கண்டிக்கத்தக்கது’’ என்ற சரிதா நாயர், "என்னைத் தவறாகச் சித்திரித்து சமூக வலைதளங்களில் வீடியோக்கள் இப்பவும் பரப்பப்பட்டு வருவதாகவும். அப்படிச் செய்பவர்கள் மனநோய் உள்ளவர்கள் எனவும் இது தொடர்பாக போலீஸில் புகார் கொடுத்திருக்கிறேன்’’ என்றும் தெரிவித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close