Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'தமிழக மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு, ரூ.200 கோடி ஒதுக்கீடு' - சுஷ்மா சுவராஜ்!

சுஷ்மா சுவராஜ்

மிழக மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு, ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், கச்சத்தீவு விவகாரம் குறித்து இப்போதைக்குப் பேச முடியாது என மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கருத்து தெரிவித்திருக்கிறார்.

தமிழக மீனவர்கள் மீது, இலங்கைக் கடற்படையினர் நடவடிக்கை எடுப்பது, தாக்குவது என்பது தொடர்கதையான நிகழ்வாகிவிட்டது. இன்று நாடாளுமன்றத்தில் மாநிலங்களவைக் கூடியதும், தமிழக மீனவர்கள் விவகாரம் குறித்து தமிழக எம்.பி-க்கள் மைத்ரேயன், டி.ராஜா, ரங்கராஜன் ஆகியோர் விவாதத்தை எழுப்பினார்கள். அதற்குப் பதிலளித்துப் பேசிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், "இலங்கைச் சிறையில் இருக்கும் மீனவர்களை விடுவிக்கவும், அவர்களின் படகுகளைத் திரும்பப் பெறவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறினார். மேலும், ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவிப்பதால், தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையினர் கைதுசெய்யப்படும் நிகழ்வு குறையும்.

இதற்காக மத்திய அரசு ரூ.200 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. குறிப்பாக ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு தமிழக மீனவர்கள் மாறும் வரை, இதுபோன்ற கைது நடவடிக்கையை நிறுத்தி வைக்குமாறு இலங்கை அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். இந்த நடவடிக்கைகள் தொடர்வதாலும், கச்சத்தீவு விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதாலும், கச்சத்தீவு விவகாரம் பற்றி இப்போது பேச முடியாது" என சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close