Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எனது  பெயரை கெடுக்க சதித் திட்டம் நடக்கிறது; துணை வேந்தர் தடாலடி !

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லதுரை இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப்பேசினார் . அவர் பேசியதாவது:-

துணை வேந்தர்

''மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 50 ஏக்கரில் அறிவியல் பூங்கா அமைக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் எந்தப் பல்கலைக்கழகத்தில் இல்லாத அளவில் இந்த அறிவியல் பூங்கா அமையும். இதில் ஏராளமான புதுவிதமான பறவைகள், விலங்குகள், செல்லப்பிராணிகள் இடம் பெறும். வித்தியாசமான மீன்களும் வைக்கப்படும். இதில் மீன்கள் உற்பத்தியும் செய்யப்படும். இதனால் பல துறை மாணவர்களுக்கு அறிவியல் பற்றிய பிடித்தம் உண்டாகும். வேடசந்தூர், கோட்டூர், திருமங்கலம் ஆகிய உறுப்புக்கல்லூரிகளில் புதிய கட்டடங்களைத் தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் 10 நாள்களில் திறந்துவைக்க உள்ளார்.  பல்கலைக்கழகத்தில் நீர்  வாட்டம் இருக்கும் இடத்தை நானே தேர்வுசெய்து கொடுத்த பின், 8 போர்கள் வரை போட்டுள்ளனர்.

ஒரு முழுமையான வாட்டர் சப்ளை கேம்பஸ்சாக மாற்றியுள்ளேன். இதனால் தண்ணீர் பிரச்னை இல்லை. பல்கலைகழகத்துக்கு  3 கோடி ரூபாய் வரை செலவுகளை குறைத்துள்ளேன். பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள தமிழ் செம்மல் விருதை வழங்க உள்ளேன்; மூன்று மாதத்தில் தகுதியானவர்களை அடையாளம் கண்டு விருது வழங்கப்படும். எனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு முற்றிலும் ஜோடிக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தில் வளர்ச்சியைப் பிடிக்காமல் இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளனர். என் பெயரைக் கெடுக்க பெறும் சதித்திட்டம் நடக்கிறது. ஆனால், சத்தியம்தான் கடைசியில் வெல்லும்.  கலக்கிவிட்டுப் பார்க்க நான் ஒன்றும் குட்டையில்லை, நீரோடை. நெடும்பயணத்தை தொடர்ந்துகொண்டே இருப்பேன்.  என் பதவியை கவிழ்க்க பலர் அரசியல் நடத்துகின்றனர். ஆனால், அவர்கள் அரசியல்வாதிகள் அல்ல. பல்கலைக்கழகத்தின் முன்னாள் பெரும் ஊழியர்கள். கண்டிப்பாக எனக்கு எதிரான வழக்கில் சட்டபூர்வமாக வெற்றிகாணுவேன்'' என்றார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close