Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தீரன் சின்னமலை விழாவில் உறங்கிய தமிழக அமைச்சர்..!

சுதந்திர போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலையின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் தீரன் சின்னமலையின் நினைவு தினம் தொடர்பாக ஆங்காங்கே நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டாலும், கொங்கு மண்டலத்தில் பல்வேறு இடங்களில் பிரமாண்டமான முறையில் விழாக்கள் நடைபெற்றன.

அதனையொட்டி ஈரோடு மாவட்டம், ஓடாநிலை கிராமத்தில் அமைந்துள்ள அவரது மணிமண்டபத்தில் தமிழக அரசு சார்பில் பல்வேறு நிகழ்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது, ஈரோடு மாவட்ட நிர்வாகம். மதியம் நடைபெற்ற பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட பல அமைச்சர்களும், எம்.எல்.ஏ-க்களும் கலந்துகொண்டனர்.

முன்னதாக மேடையில் அமைச்சர்கள் அனைவரும் வரிசையாக அமர்ந்திருக்க, நிகழ்ச்சி துவங்கியதில் இருந்தே வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை தூக்கம் தொளைத்தெடுக்க ஆரம்பித்துவிட்டது. அமைச்சர்கள் ஒவ்வொருவராக விழா உரையாற்றிக்கொண்டு இருந்தபோதிலும், கண்ணைத் திறக்கவே முடியாத அளவுக்கு தூக்கத்தில் ஆழ்ந்து போனார் திண்டுக்கல் சீனிவாசன். பின்னர் அருகில் இருந்தவர்கள் சிக்னல் கொடுத்த பிறகே சுதாரித்துக்கொண்டு விழித்தெழுந்தார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close