Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காஞ்சிபுரத்தில் போலி மருத்துவர் கைது..!

காஞ்சிபுரம் மாவட்டம், கடமலைப்புத்தூரில் போலி மருத்துவர் ஒருவரை அச்சிறுப்பாக்கம் காவல்துறையினர் கைது செய்தனர்.

போலி மருத்துவர்

அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள கடமலைப்புத்தூரில் ரங்கராஜன் என்பவர் கிளினிக் நடத்தி வந்தார். ஹோமியோபதி படித்துள்ள இவர், எம்.பி.பி.எஸ் படித்திருப்பதாகக் கூறி அலோபதி மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இதனால் இப்பகுதியினர் இவர்மீது பலமுறை சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். ஆனால், சுகாதாரத்துறை சார்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், தொடர்ந்து சில நாள்களாக அப்பகுதியினர் இவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டி சுகாதாரத்துறைக்கு அழுத்தம் கொடுத்தனர்.

இதனால் சுகாதாரத்துறை இணை இயக்குநர் சுந்தர்ராஜன், கடமலைப்புத்தூரில் உள்ள ரங்கராஜனின் கிளினிக்கை ஆய்வுசெய்தார். அப்போது அவர், அலோபதி படிக்காமல் அலோபதி மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து சுகாதாரத்துறை இணை இயக்குநர், அச்சிறுப்பாக்கம் காவல்நிலையத்துக்குப் புகார் அளித்தார். அதன்பேரில் போலி மருத்துவர் சுந்தர்ராஜன் கைதுசெய்யப்பட்டார். கடந்த 12 வருடங்களாக அலோபதி மருத்துவத்தின் மூலம் கோடிக்கணக்கில் சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close