Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளோடு தொடர்பா? - கோவையில் தேசியப் புலனாய்வு அதிகாரிகள் கிடுக்குப்பிடி விசாரணை

தேசிய புலனாய்வு அதிகாரிகள்

கோவை கரும்புக்கடைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அப்துல்லா மற்றும் அப்துல்ரகுமான். இவர்கள் இருவரும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்போடு தொடர்பு வைத்திருப்பதாகக் கருதி புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கேரளாவில் இருந்து கோவை வந்த தேசிய புலானாய்வு முகமை அதிகாரிகள், கோவை கரும்புக்கடை, ஆசாத் நகர் பள்ளிவாசல் வீதியில் தீவிர விசாரணை நடத்தினார்கள். இதனால் அந்தப் பகுதி பதற்றத்துக்குள்ளானது. என்ன ஏது? என்று தெரியாமல் பொதுமக்கள் அச்சத்துக்குள்ளானார்கள். அதன்பிறகே, அவர்கள் அப்துல்லா மற்றும் அப்துல் ரகுமான் உள்ளிட்ட சிலரைத் தேடி வந்துள்ளதாக தெரிந்தது. அவர்கள் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ்-ன் முகநூல் பக்கத்தில் அந்த அமைப்புக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்தார்கள் என்றும் அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறதென்றும் சொல்லப்படுகிறது.

தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் அப்துல்லா மற்றும் அப்துல்ரகுமான் இருவரிடமும் சுமார் மூன்று மணி நேரமாக விசாரணை நடத்தினர். அதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. அப்துல்லா ப்ளஸ் டூ முடித்தவர். செல்போன் கடையில் வேலை பார்க்கிறார். அப்துல்லாவின் நண்பரான அப்துல்ரகுமான் முதுநிலை பட்டதாரி.

இவர்களில், அப்துல்லா நாளை ஹஜ் பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை வளையத்தில் அவரை கொண்டுவந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close