Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'கமலை மிரட்டுவது நல்லதல்ல': தமிழக அமைச்சர்களை எச்சரிக்கும் நல்லக்கண்ணு

”மத்திய பா.ஜ.க அரசு தமிழகத்தில் உள்ள மூன்று குழுக்களுடன் இணைந்து தன்னுடைய ஆட்சியை நிலைநிறுத்த முயற்சிசெய்து வருகிறது” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தெரிவித்துள்ளார்.

நல்லக்கண்ணு

புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.குருசாமியின் உருவப்படம் திறப்பு மற்றும் அவரது வாழ்க்கை வரலாற்றுச் சுவடு புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களைச் சந்தித்த நல்லக்கண்ணு, “டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கை நியாயமானது. அவர்களை மத்திய அரசு அழைத்துப் பேசி தீர்வுகாண வேண்டும். 600 கோடி ரூபாய் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கொடுக்கப்படுகிறது. ஆனால், விவசாயிகள் கடன்களை ரத்துசெய்ய மறுக்கின்றனர். மத்திய அரசு விவசாயிகளுக்கு விரோதமாக செயல்படுகிறது. விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். புதுச்சேரியில் விவசாயக் கூட்டுறவுக் கடன் தள்ளுபடியில் துணைநிலை ஆளுநர் கையெழுத்திடாதது கண்டிக்கத்தக்கது.

மத்திய அரசு தமிழகத்தில் 3 ஊழல் பேர்வழிகளுடன் இணைந்து தங்கள் ஆட்சியை நிலைநாட்ட முயற்சிக்கிறது. காவிரி பிரச்னையில் மத்திய அரசு கவலைப்படவேயில்லை. காவிரி பிரச்னையில் தீர்வுகாண தனி நடுவர் மன்றம் வேண்டும். புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என பா.ஜ.கவினர் துடிக்கின்றனர். முட்டை விவகாரத்தில் ஊழல் என கூறிய  நடிகர் கமல்மீது குற்றம் சுமத்துவதும், தமிழக அமைச்சர்கள் அவரை மிரட்டுவதும் சரியானது அல்ல” என்றார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close