Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

400 ஆண்டுகளுக்கு இந்த ஆட்சி நிலைத்திருக்கும் - அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு

தீரன் சின்னமலையின் நினைவுதினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. அதனையொட்டி ஈரோடு மாவட்டம் ஓடாநிலை கிராமத்தில் அமைந்துள்ள அவரது மணிமண்டபத்தில் தமிழக அரசு தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைத்திருந்த இவ்விழாவில், தமிழக அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி வேலுமணி, கே.பி அன்பழகன், சரோஜா, கே.சி கருப்பணன், உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு, விஜயபாஸ்கர் ஆகியோரும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

காலை தொடங்கிய விழாவில் கே.ஏ.செங்கோட்டையன் உள்பட அமைச்சர்கள் பலரும் தீரன் சின்னமலையின் மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினர். பின்னர் தற்போதைய அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் கண்காட்சி அரங்கு பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது. அதன்பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில், தீரன் சின்னமலையின் வாரிசுதாரர்களை தமிழக அமைச்சர்கள் கெளரவித்தனர். அப்போது தோப்பு வெங்கடாசலமும் மேடையில் ஓரமாக அமர்ந்திருந்தார். இறுதியாக மதியம், விழா மேடையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அப்போது பேசிய அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன், ''இந்த அரசு விவசாயிகளுக்கான அரசு, விவசாயிகள் நலனில் அக்கறை செலுத்தக்கூடிய அரசு, அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றிக் காட்டுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதேபோன்று ஏரிகள், குளங்கள் தூர்வாரப்படுவதிலும் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறோம்.

முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை மேம்பாடு என பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி, மக்கள் பணியாற்றுவதற்காகவே பொறுப்பேற்றுக்கொண்டிருக்கிறது இந்த அரசு. ஆனால், இந்த ஆட்சி நிலைத்து நிற்காது, அடுத்த நான்கு வருடங்களுக்கு தாக்குப்பிடிப்பதே பெரும் சிரமம் என்று பலர் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அடுத்த 4 ஆண்டுகளுக்கு மட்டுமல்ல. இன்னும் 400 ஆண்டுகள் ஆனாலும் இந்த ஆட்சி நிலைத்து நிற்கும்'' என்றார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close