Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பொறியியல் கலந்தாய்வில் அதிகரிக்கும் ஆப்சென்ட்கள்: அலறும் அண்ணா பல்கலைக்கழகம்!

பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழத்தில் நடைபெற்று வருகிறது. ஜூலை 17-ம் தேதி தொழிற் பிரிவுக்கான கலந்தாய்வு தொடங்கியது. ஜூலை 23-ம் தேதி பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு தொடங்கியது. இந்நிலையில், 12-வது நாளாக இன்றும் கலந்தாய்வு நடைபெற்றது.

அண்ணா பல்கலைக்கழகம்


இன்றைய கலந்தாய்வுக்காக 7,832 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் 4,726 இடங்கள் ஒதுக்கப்பட்டன. 3,077 பேர் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. குறிப்பாக கலந்தாய்வில் ஆப்சென்ட் ஆகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த ஆண்டு 1 லட்சத்து ஆயிரத்து 318 இடங்கள் காலியாக இருந்தன. 

இந்நிலையில், பொதுக் கலந்தாய்வு 12-வது நாள் முடிவில் தற்போதுவரை 79,919 பேர் கலந்தாய்வுக்காக அழைக்கப்பட்டனர். அவற்றில் 53,856 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. முக்கியமாக 25,711 பேர் கலந்தாய்வில் கலந்துகொள்ளவில்லை. அதாவது, கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டவர்களில் 32.17 சதவிகிதம் பேர் பங்கேற்கவில்லை. தற்போதைய நிலவரப்படி, 1 லட்சத்து 21 ஆயிரத்து 483 இடங்கள் காலியாக உள்ளன. இதன்மூலம் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் லட்சக்கணக்காக இடங்கள் நிரப்பப்படாமல் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close